September 13, 2008

தமிழகத்தில் கேபிள் இணைப்பு இலவசம்?

உளி-யின் ஓசை படத்-தின் மூலம் முதல்-வர் கரு-ணா-நி-திக்கு கிடைத்த ரூ.25 லட்-சத்-தில்(?) வரு-மானவரி போக ரூ.18 லட்-சத்தை, தலா ரூ.20 ஆயிரம் வீதம் நலிந்த தொழில்நுட்-பக் கலை-ஞர்-களுக்கு வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, ரூ.1க்கு கிலோ அரிசி என்பது என் கற்-ப-னை- யில் உதித்த திட்-டம் அல்ல. 1967ல் அண்ணா திட்-ட-மிட்-டது. அப்-போ-தி-ருந்த பொரு-ளா-தாரநிலை அவர் லட்-சி-யத்தை ஈடு-செய்ய போது-மா-னதாக இல்லை. அண்ணா நூற்-றாண்டு விழா நேரம்-தான் சரியான நேரம் என்று திட்-ட-மிட்டு இப்-போது தொடங்-கப்-பட்-டுள்-ளது. ஏழை, நடுத்-தர மக்-களை கவ-ரக் கூடிய ஒரு புதிய திட்-டம், காந்தி பிறந்த நாளான அக்-டோ-பர் 2ம் தேதி தொடங்-கப்ப-டும். அது என்ன திட்-டம் என்-பதை இப்-போது சொல்லவிரும்பவில்லை,’’ என தெரிவித்துள்ளார். ஆஹா மறுபடியுமா? இலவச கலர் டிவி, இலவச காஸ், ரூ.2க்கு கிலோ அரிசி, ரூ.1க்கு கிலோ அரிசி என அடுத்தடுத்த அறிவிப்புகளால் தன்னை சார்ந்தவர்களை இன்புறுத்திய கருணாநிதி அடுத்த திட்டத்தை அறிவிக்கப்போகிறாரா? என தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. அவரே சஸ்பென்சுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் யூகங்களுக்கு வழி காட்டியிருக்கிறார் கருணாநிதி. சரி அது என்ன புதிய திட்டம். இப்போதைய சூழலுக்கு இது இலவச கேபிள் இணைப்பு திட்டமாகத்தான் இருக்க கூடும். தமிழகத்தில் கிளம்பியுள்ள மின்தடை பிரச்னை மற்றும் கேபிள் பிரச்னை ஒரு சேர தீர்க்க இது தான் சரியான திட்டமாக அமையும். இதில், தன்னை சார்ந்த சிலர் பாதிக்கப்படக்கூடும் என்றபோதும், பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள சூழலில், இது அவசியமாகிறது. அரசு கேபிள் துவக்கம், மாறன் சகோதரர்களுடனான மோதலுக்கு பழி தீர்ப்பது போன்றவைக்கு இது பயன்படும். அது சரி அக்டோபர் 2ம் தேதி வரை பொறுத்திருப்போம். இலவச கேபிள் இணைப்பு திட்டத்துக்கு . . .

No comments: