ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 19 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினியை விடுவிக்க முடியாது எனக்கூறி, தனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள நெருக்கத்தை (?!) அதிகரித்துக்கொண்டுள்ளது தி.மு.க. அரசு. தி.மு.க.விடமும், அதன் தலைவர் கருணாநிதியிடமும் இருந்து இதைதான் எதிர்பார்க்க முடியும் என்ற போதும், ஏனோ ஏராளமான சங்கடங்களுடன் இதை எதிர்கொள்ள வேண்டியதாய் உள்ளது.
பிரியங்கா காந்தியின் இந்த சந்திப்பால், அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பும் பொய்த்து போனது. தன் கணவர் (?!) சாவுக்காக, தமிழினத்தை கொன்று குவித்த சோனியாகாந்தியிடமும், அதற்கு துணை போன தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் இனியும் எதிர்பார்க்க என்ன இருக்கிறது. சோனியாகாந்தி தன் கனவில் என்ன நினைத்தாலும் அதை நிறைவேற்றி வரும் கருணாநிதியிடம் ஒரே ஒரு கேள்வி ஆயுள் தண்டனை பெற்ற நளினியை 19 ஆண்டுகளுக்கு பின்னரும் விடுவிக்க மறுக்கும் நீங்கள், மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு, 3 ஊழியர்கள் கொல்லப்பட்டார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தி.மு.க.வை சேர்ந்த தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய மறுத்ததற்கு என்ன காரணம்? இந்த கேள்விக்கு பதில் உள்ளதா உங்களிடம். ராஜீவை நளினி கொலை செய்தார் என்பது உண்மையாகவே இருக்கட்டும். அதற்கு 19 ஆண்டுகள் சிறை என்பது மிக அதிகம் என்பதை யாராலும் உணர்ந்து கொள்ள முடியவில்லையா.
4 comments:
இதற்கு பெயர்தான் "அரசபயங்கரவாதம்".
ஜெரி ஈசானந்தன். said...
இதற்கு பெயர்தான் "அரசபயங்கரவாதம்".
எது எப்படியோ தி.மு.க. அரச தந்திரம் நமக்கு புலப்பட மாட்டீங்கிது. நல்ல பதிவு வாழ்த்துக்கள்
1. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். அது லீலாவதியாக இருந்தால் என்ன? ராஜிவ்வாக இருந்தால் என்ன?
2. காந்திக் கொலை வழக்கில் கோட்சேவின் சகோதரரின் ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.விடுதலையான அவர் காந்தியைக் கொன்றதற்காக வருந்தவில்லை என்று பேட்டி கொடுத்தார்.
3. விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றவர்கள், அதன்பின்பு நீதிமன்றம் உத்தரவுக்குப்பின் விடுதலை செய்ய முடியாது என்று அறிக்கை விட்டனர்.
4. ராஜிவ் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல, பழிவாங்கும் செயல் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ராஜிவ் கொலை செய்யப் போகிறார் என்று ஸ்ரீ பெரும்புதூர் செல்லும் வரை நளினிக்குத் தெரியாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மூன்று நீதிபதிகளில் ஒருவர் கூறியிருக்கிறார்.
Post a Comment