October 26, 2009

பேராண்மையும், ஊடகங்களின் பார்வையும்

‘நம் சக்தியை, எதிரிக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்தணும்’ பேராண்மை படத்தில் கதாநாயகன் பேசும் வசனமாக இதை எழுதியிருப்பார் இயக்குனர் சனநாதன். இப்போது ஒட்டுமொத்த ஊடகங்களும், சனநாதனை எதிரியாக பார்க்கிறதோ என்னவோ. தனது சக்திகளை திரட்டி எதிர்க்க துவங்கியுள்ளன. சாதி எதிர்ப்பு அரசியல், அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பு ஆகியவற்றை பிரதானமாக முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தில் எந்த ஊடகங்களும், அதனை குறிப்பிடாமல் (சாதியிய, அதிகார வர்க்க கண்ணோட்டத்தில்) இந்த படத்தை ஒரு தேசபக்தி திரைப்படமாக சித்தரித்து வருகின்றன. உண்மையில் ‘பேராண்மை’ தேச பக்தி படமா?.
01. இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கைகோள் ஏவுவதாக தொடங்குகிறது இந்த திரைப்படம். இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கை கோள் ஏவுகிறது என்றால், குழந்தை கூட நம்பாது. விவசாயம் சார்ந்த அடிமட்ட தொழிலாளர்கள் நலனை காக்காமல் அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்பதை மறைமுகமாக சித்தரிக்கும் காட்சியாகவே இதனை பார்க்கிறேன். எனவே இந்திய அரசை போற்றும் படமாக, தேச பக்தி படமாக கருத முடியாது.
02. ‘காட்டுல சுள்ளி பொறுக்கிறவனை கூட விடமாட்டோம்’ என காட்டில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றும் வனத்துறை அதிகாரிகள், ‘இந்த இடத்தையும் ரியல் எஸ்டேட் போட்டு வித்துட்டீங்களா’ என அதிகாரிகளிடம் கேட்கும் பழங்குடியின மக்கள் என அரசின் உத்தரவுகளுக்கு எதிரான வசனங்கள் இந்த படத்தில் நிரம்பியுள்ளன. எப்படி இதனை தேச பக்தி படமாக பார்ப்பது?
03. ‘என்ன சர்வாதிகாரம் பண்ணறீங்களா? உழைக்கிற மக்கள் சர்வாதிகாரம் பண்ற நாள் சீக்கிரம் வந்துடும்’ என பழங்குடியின மக்கள் பேசும் வசனங்கள், தேச பக்தி திரைப்படத்தின் வசனங்களாக எப்படி பார்க்க முடிகிறது?
04. ‘எந்த வசதி இல்லாமலே இவங்க இவ்வளவு படிக்கறாங்களே. வசதி இருந்துட்டா அவ்வளவு தான் நம்மளை ஒதுக்கீருவானுங்க’ என்ற வசனத்திலும், ‘சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை’ எனும் பாடல் வரிகளிலும் பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்படுவதை அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படத்தை இந்திய அரசை போற்றும் படமாக கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்?
05. படத்தின் இறுதியில் பொன்வண்ணன் விருது பெறுவது போல் காட்சி உள்ளதே, அதனை அதிகார வர்க்கத்துக்கு எதிரான காட்சியாக சித்தரிக்க முடிகிறதா, தேச நலன் காத்த வீரருக்கான விருதாக சித்தரிக்க முடிகிறதா?
வழக்கமான திரைப்படங்களில் இருந்து முழுமையாக வேறுபடுகிறது பேராண்மை திரைப்படம்.
01. முதலில் படத்தின் கதாநாயகன் துருவன். அம்பி, கிச்சா, ராகவன் என சிலரை மட்டுமே கதையின் நாயகர்களாக நம் முன்னிறுத்தி வந்த திரைப்படங்களில் இருந்து வேறுபடுகிறது பேராண்மை. துருவன் என்ற பழங்குடியின மக்களில் ஒருவரை கதாநாயகனாக காட்டியதற்கு இயக்குனர் சனநாதனை யாரால் பாராட்டாமல் இருக்க முடியும்.
02. சாதி எதிர்ப்பு அரசியல். ‘அவன் என்ன சாதி, நாம என்ன சாதி, நமக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு’ என கதாநாயகன் துருவனை பற்றி நாயகிகள் விமர்சிக்கும் வசனங்களில் இளம் பெண்களிடம் படிந்துள்ள சாதியுணர்வை கூறியுள்ளதும், ‘எங்க ஆளுங்களுக்கு இங்கிலீஸ்ல பேசுனா புரியாது. உங்க கிட்ட பேசுன உங்களுக்கு புடிக்காது’ என நாயகிகளிடம் கூறும் இடங்களில் சாதி எதிர்ப்பு அரசியலை விதைத்துள்ளதிலும் இயக்குனர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
03. அதிகார வர்க்க எதிர்ப்பு. அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பை அப்பட்டமாக பதிவு செய்துள்ளது இந்த திரைப்படம். பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் என்பதால் வனகாவலவரான கதாநாயகனிடம், தனது ‘ஷ¨’வை பாலிஸ் போட்டுவரச்சொல்லும் வன அதிகாரி, அதே காட்சியில் உயர்சாதியை சேர்ந்த கல்லூரி மாணவிகளை உட்கார வைத்து பேசுவது என பல இடங்களில் அதிகார வர்க்க எதிர்ப்பை காட்டியிருக்கிறார் இயக்குனர். இறுதியில் குடியரசுத்தலைவரிடம் பொன்வண்ணன் விருது பெறுவது அதிகார வர்க்க எதிர்ப்பை முழுமையாக அம்பலமாக்கும் காட்சி.
04. படத்தின் பெயரில் ஆண்மையிருக்குமாறு பேராண்மை என பெயரிட்டு, பெண்மை போற்றும் வகையில் பெண்களை கதையின் நாயகிகளாகவும், சகாசம் செய்பவர்களாகவும் முன்வைத்ததற்காகவும் பாராட்டுகள். ‘கிராமத்துக்கு பெண்களுக்கு முந்தானை விலக்கியே காலம் போச்சு; நகரத்து பெண்களுக்கு முடியை விலக்கியே காலம் போச்சு’ என்பன உள்ளிட்ட வசனங்கள் ‘நச்’.
05. தீவிரவாதிகள் என்றதும் இஸ்லாமியர்களை கண்முன் நிறுத்தும், திரைப்படங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது பேராண்மை. சர்வதேச கூலிப்படையினரின் முகத்தையும், ரசிகர்களுக்கு காட்டியது அழகு.

October 22, 2009

கருணாநிதியை நம்புவோருக்கு சில கேள்விகள்

‘ராஜீவ்காந்தி மரணத்துக்காக இன்னும் எத்தனை தமிழர்கள் சாகணும்’ யாழ்ப்பாணம் நாடாளுமன்றத்தில் நம் நாடாளுமன்ற குழுவிடம் ஒரு மாணவன் கேட்ட கேள்வி இது. வழக்கம்போல் மௌனத்தையே அந்த மாணவனுக்கு பதிலாக அளித்தது நாடாளுமன்ற குழு. இதேபோன்று இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் சித்ரவதை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தரப்பில் கேட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு நாடாளுமன்ற குழுவிடம் பதில் இல்லை.
வன்னி முகாம்களுக்கு இன்பச்சுற்றுலா சென்று, 5 நாட்களுக்கு பின்னர் திரும்பிய நாடாளுமன்ற குழுவினர், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே விமான நிலையத்துக்கு சென்று அவர்களை அழைத்து வந்தார் கருணாநிதி. அதன்பின்னர், சென்று வந்தவர்களின் சார்பில் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. முகாம்களில் இருந்து பல ஆயிரம் பேர் வெளியேறுவார்கள் என விவரித்தார் அவர். இதை எவன் நம்புவான்.
‘ஓநாயுடன் நீ வசித்தால், ஊளையிடத்தான் கற்றுக்கொள்வாய்’. என் நண்பர் ஒருவர் அடிக்கடி உச்சரிக்கும் இந்த பழமொழிக்கு நீண்ட நாட்களாக உடன்படாமல் இருந்தவன் நான். ஆனால், இதோ இப்போது உடன்படுகிறேன். கருணாநிதி எனும் ஓநாயுடன் இருந்தவர்கள் (தி.மு.க.வினர்) எல்லாம், இப்போது அவர் போல் ஊளையிடத் துவங்கிவிட்டனர்.
‘இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்று தந்துவிட்டார் கருணாநிதி’ என பிரசாரம் செய்யத்துவங்கியுள்ளனர். ‘இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத்தந்த கலைஞருக்கு பாராட்டு. வாழ்க தலைவர் கலைஞர்’ என குறிப்பிட்டு சுவரொட்டிகளை ஊரெங்கும் ஒட்டி வருகின்றனர் தி.மு.க.வினர். எவன் நம்புவது இதை? இது உண்மை என நம்ப யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், இது உண்மையாக இருக்குமோ என சிலர் எண்ணலாம். அதோ அவர்களுக்கு சில கேள்விகள்.
01.‘தமிழீழத்தை ஆதரிக¢காதவன் சோற்றாலடித்த பிண்டம்’ என்று முன்னர் முழங்கிய கருணாநிதி, ‘ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் நிலைதான் எனது நிலை’ ‘இலங்கையில் தனிஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல் அங்குள்ள தமிழர்களின் சம உரிமைக்குப் போராடுவோம். எதிலும் நீக்குப் போக்கு வேண்டும்’ என தற்போது கூறினாரே அதற்கு காரணம் மத்தியில் ஆட்சியில் பங்கு போய்விடுமோ என்ற பயம் காரணமில்லை என நினைக்கிறீர்களா?
02. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘‘இலங்கையில் நம் சகோதரர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உயிர் இங்கே போனால் என்ன? கடல் கடந்து அங்கே போய் போனால் என்ன? இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசு அந்நாட்டை நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையென்றால் இனியும் இந்தப் பதவி எதற்கு என்று யோசிக்க வேண்டியிருக்கும்’’ என்று கருணாநிதி முழங்கினாரே? அந்த கோபம் அதன் பின்னரும் இருந்தது என நம்புகிறீர்களா?
03. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்துக் கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டிய கருணாநிதி, போரை நிறுத்த நடவடிக்கை எடுகுகப்படாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வது என தீர்மானம் நிறைவேற்றினாரே? எம்.பி.க்கள் ஏன் ராஜினாமா தீர்மானம் என்ன ஆனது என தெரியாத நிலையில், இந்த தீர்மானத்தால், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா?
04. காங்கிரசை எதிர்க்கிறார்கள், இது தேச விரோதம்?! என கொதித்தெழுந்த கதர் சட்டைகள் இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என்று கூக்குரலிட்டன. இதையடுத்து, வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர், நாஞ்சில் சம்பத் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் தூண்டுதலால் கைது செய்யப்படவில்லை. உண்மையில் இறையாண்மைக்கு எதிராக பேசினார்கள் என உங்களால் கூற முடியுமா?
05. ‘அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களையும், என் வேண்டுகோளையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்காக சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ கருணாநிதி வெளியிட்ட அறிக்கை இது. இது உண்மை என நீங்கள் நம்புகிறீர்களா?
06. இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு கோரி, முத்துக்குமாரில் துவங்கி பலர் தீக்குளித்து மாண்டார்களே, அவர்களுக¢காக இரங்கல் தெரிவிக்காத முதல்வர் கருணாநிதி. மாறாக, அவர்களை ‘வறுமையில் தற்கொலை செய்து கொண்டவர்கள்’ என்றும், ‘வயிற்று வலி காரணம்’ என்றும், ‘மனநிலை பாதிக¢கப்பட்டவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக¢ கொண்டு செத்துப் போனார்கள்’ என்றும் தனது போலீசை விட்டு அறிவிக்க வைத்தாரே? கருணாநிதியின் இந்த கருத்தில் ஒத்துப்போக முடியுமா உங்களால்?
07. இலங்கைத் தமிழர் பிரச்னையில், சீமான், அமீரைத் தொடர்ந்து திரையுலகத்தினர் பலரும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில், மத்திய அரசை கடுமையாகக¢ கண்டிக்கத் தொடங்கினர். இந்த நேரத்தில் நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘திரைப்படத்துறைக்கு ஏராளமான சலுகைகள் அளித்தும் அதன் பலன் பொதுமக்களுக்குச் சென்றடையாத நிலை தொடர்வதால் இச்சலுகையை மறுபரிசீலனை செய்ய செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்ததே, அது ஏன் என தெரியுமா உங்களுக்கு?
08. இலங்கையில் நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள், வீரர்களும் அவர்களுடன் கொல்லப்பட்டனர். பிரபாகரன் இறந்து விட்டாரா என கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘தனிப்பட்ட விடுதலைப் புலிகள் குறித்தோ, தனிப்பட்ட மனிதர்கள் குறித்தோ நான் பேச விரும்பவில்லை’’ என்று பதிலளித்தார். அது சரி அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்களே, அதற்கு கூட கருணாநிதி கண்டனம் தெரிவிக்காதது ஏன்? 2007ல் விடுதலை புலிகள் அமைப்பினை சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்காக கண் கலங்கிய கருணாநிதி, இந்த நேரத்தில் மவுனமாக இருந்ததற்கு காரணம் ஏதும் இல்லை என நம்புகிறீர்களா?
09. அப்பட்டமான தமிழினப் படுகொலைகளைச் செய்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்காவும், மேற்கு உலக நாடுகளும் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அமைச்சரவையில் கூடுதல் இடம் கேட்கத் தெரிந்த கலைஞர் இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம் என கருதுகிறீர்கள் நீங்கள்?
10. இந்த கேள்விக்கு பின்னரும் இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு காண முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார் என நம்புகிறீர்களா?

October 14, 2009

தினமலர் ஊழியருக்கு சில கேள்விகள்

இலங்கையில் இந்திய அரசே முன்னின்று போரை நடத்தி வந்த நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் நடந்ததைபோல திசைமாறி கிடக்கிறது ஊடகங்களின் போராட்டம்.
திரைப்பட நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, எவ்வித ஆதாரமுமின்றி தினமலர் நாளிதழ் அவதூறு செய்தியை வெளியிட்டதின் பயனாக திரையுலகம் கொதித்தெழ விஸ்வரூபம் எடுத்தது பிரச்னை. சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க திரையுலகமே கோரியதையடுத்து, தினமலர் செய்தி ஆசிரியர் (?) லெனின் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்களை நடிகர்கள் விமர்சிக்க, கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விமர்சனத்தை எதிர்த்தும் ஊடகவியலாளர்கள் கொதித்தெழுந்தனர்.
இதில் பெரும்பாலான போராட்டங்களை முன்னின்று நடத்தியது தினமலர். மற்ற நிறுவன ஊழியர்களை மிகவும் வலியுறுத்தி கூட்டம் நடத்துங்கள், தீர்மானம் போடுங்கள், போராட்டம் நடத்துங்கள் என தினமலர் நிறுவன ஊழியர்கள் கெஞ்சியதை யாரும் மறுக்க முடியாது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் தினமலர் லெனின் கைதை கண்டித்து போஸ்டர் ஒட்ட ஒரு பத்திரிக்கையாளர்கள் சங்கத்துக்கு ரூ.10 ஆயிரம் பணத்தை வாரி வழங்கியது தினமலர்.
இதன் பின்னர் தினமலர் ஊழியர்களும், இன்ன பிற ஊடக நிறுவன ஊழியர்களும் சில இடங்களில் போராட்டமும், கண்டன தீர்மானங்களையும் நிறைவேற்றல் நிகழ்வையும் நடத்தினர். ஆனால், இவை எல்லாம் சரிதானா என்பதில் தான் சிக்கல்.
இது தொடர்பாக தினமலர் ஊழியர்களுக்கு சில கேள்விகள்.
01. தினமலரின் செய்தி ஆசிரியர் லெனின் தானா? அப்படியெனில் இதற்கு முன்னர் தினமலர் நாளிதழில் வந்த அலுவலகம் சார்ந்த செய்திகளில் செய்தி ஆசிரியர் என வேறு நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது ஏன்? செய்தி ஆசிரியர் என்ற பதவி உயர்வு அவருக்கு எப்போது வழங்கப்பட்டது?
02. ஒரு நாளிதழ் மீது சட்டரீதியிலான பிரச்னை என்றால், சம்பந்தப்பட்ட நாளிதழ் பொறுப்பாசிரியர் அல்லது வெளியீட்டாளர் மீது தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், கைது செய்யப்பட்ட நாளான்று நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசித்த பின்னரே செய்தி ஆசிரியர் (?) லெனின் கைது செய்யப்பட்டார். அப்படியேனில், செய்தி ஆசிரியரை போலீசாருடன் அனுப்பி வைத்தது யார்?
03. தினமலர் நாளிதழில் பணியாற்றும் யாரும் பத்திரிக்கையாளர் சங்கங்களில் பங்கெடுத்துக்கொள்ள முடியாது. இது நிர்வாகத்தின் நேரடி உத்தரவு. அப்படியிருக்க இப்பிரச்னையில் மட்டும் பத்திரிக்கையாளர் சங்கங்களை அணுக உங்களை நிர்வாகம் வலியுறுத்தியது ஏன்?
04. திருப்பூரில் தினமலர் நாளிதழ் நிருபர், புகைப்பட கலைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது, ஒட்டுமொத்த ஊடகங்களும் கொதித்தெழுந்து போராட்டம் நடத்திய போது, பாதிக்கப்பட்ட நீங்கள் (தினமலர் ஊழியர்கள்) மட்டும் பங்கேற்காமல் புறக்கணித்ததின் காரணம் தெரியுமா உங்களுக்கு?
05. உங்கள் நிறுவன (தினமலர்) நிர்வாகி ஒருவர் மீது பெண் நிருபர் ஒருவர் பாலியல் புகார் கூறிய போது, (அது உண்மை என தெரிந்தும்) கொதித்தெழுந்தீர்களே? மற்றவர்களை கொச்சைபடுத்துதல் மட்டும் தகுமோ?
06. திரைப்பட இயக்குனர்களில் மணிரத்னம், நடிகர்களில் கமலஹாசன், ரஜினி தவிர சிலரை தவிர, மற்றவர்களை இயக்குனர், நடிகர் என குறிப்பிடாமல் சினிமாகாரர் என்ற அடைமொழியுடன் பிரசுரிப்பது ஏன் என தெரியுமா?
07. இலங்கை தமிழர் ஆதரவு அமைப்புகள், பெரியார் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகளின் செய்திகள் மற்ற பத்திரிக்கைகளில் வந்தாலும், உங்கள் பத்திரிக்கையில் இடம்பெறுவதில்லையே ஏன் என தெரியுமா உங்களுக்கு?
08. நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என நீட்டி முழக்கி எழுதுகிறீர்களே? அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இதுபோன்ற பிரச்னையில் சம்பந்தப்பட்ட போது அதனை அடக்கி வாசிப்பது ஏன்? அதுபோன்ற செய்திகளை வெளியிடாதது ஏன்?
09. கோவை உட்பட பல்வேறு இடங்களில் இப்பிரச்னை குறித்து நடந்த பத்திரிக்கையாளர் சங்க கூட்டங்களில் தினமலரின் செய்தி மீது கடுமையான விமர்சனம் இருந்தது. பத்திரிக்கையாளர் கைதுக்கு கண்டனம் தெரிவித்ததை செய்தியாக விவரித்த ‘தினமலர்’, இதனை குறிப்பிடாதது ஏன்?
கேள்விகளுக்கு எனக்கு பதில் தேவையில்லை. உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.
மற்ற ஊடகவியலாளர்களும் இந்த கேள்வியில் ஆழ்ந்து தினமலரின் நிலையை புரிந்து கொண்டால், தினமலர் நாளிதழுக்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது தெரியும். ஆயிரம் பிரச்னை நடந்தாலும், தினமலர் தன்போக்கில் இருந்து மாறாது, எனவே மீண்டும் அது சர்ச்சையில் சிக்கும். ஆனால் அப்போது மற்ற ஊடகவியலாளர்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள். அதையும் நாம் காணத்தான் போகின்றோம்.

October 12, 2009

தாலி தேவையா?

‘சிவந்த மை பூசிய பெண்கள், வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்’. எனக்கு மிகவும் பிடித்த இத்தாலிய நாட்டு பழமொழி. சமீபத்தில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியை பார்க்கும் போது நான் மீண்டும் அசை போட்டது இந்த பழமொழியைத்தான்.
தாலி தேவையா, இல்லையா என சுமார் 1.30 மணி நேர விவாதத்தில் பெரும்பாலான நேரங்கள், ‘தாலி அணிந்தவர்கள், தாலி வேண்டும் என்பவர்கள் மட்டுமே குடும்ப பெண்கள்’ என்பது போன்ற கருத்து திணிக்கப்பட்டதை மறுக்க முடியாது. அதேசூழலில் அண்மைகாலமாக தாலி என்பது பெண்ணுக்கு தேவையா என்ற எதிர்ப்பு குரல் ஒலிப்பதையும் இந்த நிகழ்ச்சி பதிவு செய்தது.
‘தாலி என்பது ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணுக்கு தாலி என்றால், அப்ப ஆணுக்கு என்ன?’ என கேட்டது தாலி வேண்டாம் எனும் தரப்பு. ‘ஆணுக்கு வேணும்னா தாலி மாதிரி ஏதாவது போட்டுக்கலாம். பெண்ணுக்கு வேணாங்கறது சரியில்லை’ என்றது மற்றொரு தரப்பு. சினிமாக்களை போல, நிஜவாழ்வில் ‘தாலி’ என்பது கலாச்சார சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்று ஏராளமான சென்டிமெண்டுகளை நம் மக்கள் விதைத்து விட்டனர். அதுபோன்ற கலாச்சார பாதுகாவலர்களுக்கு சில கேள்விகள்.
01. பெண்களை திருமணம் ஆனவர், ஆகாதவர் என வித்தியாசப்படுத்தும் வகையில் தான் இந்த ‘தாலி’ உள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடும் கொடுக்காதது ஏன்? (தெருநாய்க்கும், வீட்டு நாய்க்கும் வித்தியாசப்படுத்தும் முயற்சியாக நாய்க்கு கட்டும் லைலென்சு போன்றது தான் இந்த தாலி என நான் நினைக்கிறேன்)
02. பெண்களுக்கு திருமணத்தின் போது தாலி, மெட்டி அணிவதை போல, ஆண்களின் கால்களிலும் வளையம் ஒன்று அணிவிக்கப்படும். ஆனால் திருமணமாகி சில தினங்களில் அது கழற்றிக்கொள்ளலாம். ஆனால், பெண் காலத்துக்கும் கழற்ற கூடாது. இது ஆணாதிக்க போக்கில்லை என நீங்கள் நம்புகிறீர்களா?

03. ‘தாலி என்பது பெண்களின் உயிர். கணவர் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம்’ என்கிறீர்கள். அது சரி. கணவன் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு என்ன அடையாளம்? தாலி இல்லாவிட்டால் உங்களால் கணவனுக்கு நம்பிக்கையுடன் இருக்க முடியாதா?

04. ஒரு பெண் தாலி அணிந்தால் தான், திருமணம் ஆனவளாக ஏற்றுக்கொள்வீர்களா? மனம் ஒத்துப்போன இடத்தில் பெண்ணுக்கு மட்டும் தாலி எனும் அடையாளக்குறி எதற்கு?
05. ‘மந்திரம் சொல்லி கட்டப்படும் தாலிக்கு எப்படி அர்த்தம் இல்லாமல் போய்விடுமா’ என கேட்கிறீர்கள். ‘தாலியில் குங்கும் வைத்து வழிபட்டால் கணவர் நீடூழி வாழ்வார்’ என்கிறீர்கள். ‘கணவர் நலனுக்கு சுமங்கலி பூஜை நடத்துகிறீர்கள்’ ‘இதெல்லாம் நம் கலாச்சாரம் என்கிறீர்கள்’. கணவர் மீது மனைவி அன்பை காட்ட இத்தனை நிகழ்வுகள், கணவருக்கு மனைவி மீது அன்பில்லையா? இல்லை இருக்க வேண்டிய அவசியம் இல்லையா?
திருமணம் என்பது ஒரு பந்தம். அன்பும், புரிதலும் தான் திருமண பந்தத்துக்கு தேவையான அடையாளங்கள். இவை இரண்டும் இருவருக்கும் தேவை. அதைவிடுத்து தாலியை பெண்ணுக்கு மட்டும் அணிவித்து விட்டு, அந்த முறையை உங்களை வைத்தே வளர்த்து வரும் ஆணாதிக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
‘சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்’. முகம் சிவக்க வெட்கப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலியும் அதுபோலத்தான்.

September 23, 2009

‘சீமானுடன் நான்’

‘என்னை பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும், அவர் தமிழ் பற்று உடையவர் என்று கருதினால், அவருக்கு நான் அடிமையே ஆவேன்’. பெரியாரின் இந்த வார்த்தைகள் போதும், சீமானுடனான எனது இந்த சந்திப்பின் அர்த்தத்தை புரிய வைக்க.
நாம் தமிழர் இயக்கம். தேர்தலுக்கு பின்னதாய், திரைப்பட இயக்குனர் சீமானால் ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கம். ஜூன் 18ம் தேதி துவங்கிய இந்த இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மாநிலம் முழுவதும் சுழன்றடித்து கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி வருகிறார் சீமான். திருப்பூரில் கலந்துரையாடல் நடத்த வந்த தோழர் சீமானை தங்கும் விடுதியில் சந்திக்க நேர்ந்தது. ‘நாம் தமிழர் இயக்கம்’ பற்றியும், அதன் மீதான விமர்சனங்களை பற்றியும் பேச்சு தொடங்கியது.
‘நாம் தமிழர் இயக்கம்’ ஏன், எதற்கு?
ஈழத்தில் போர் உக்கிரமடைந்த போது, ஈழத்தில் இருந்த ஒவ்வொருவரும் ‘தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்கள் தங்களை காப்பார்கள்’ என நம்பினார்கள். ஆனால், என்ன செய்ய முடிந்தது. தனி தமிழீழம் ஏன் தேவை என்பதை தமிழக மக்களிடம் புரிய வைக்க நம்மால் முடியவில்லை. இதற்கு நாம் ஒன்றுபடாததே காரணம். ஆனால், இனி இவையெல்லாம் ‘நாம் தமிழர்’ இயக்கத்தால் இனி நடந்தேறும். ‘நாம் தமிழர் இயக்கம்’ தமிழர்களை ஒன்று படுத்தும் இயக்கம். இந்திய தேசியமும், திராவிடமும், தமிழர்களின் இன உணர்வை, மான உணர்வை வீழ்த்தியதின் பின்னர், உதித்தது தான் ‘நாம் தமிழர்’ எனும் தமிழ் தேசிய இயக்கம்.
தந்தை பெரியாரின் திராவிடத்தை கைவிடுவது சரியா?
தந்தை பெரியாரின் திராவிடம் என்பதே தவறு. தந்தை பெரியாரே முதலில் கழகத்தை தோற்றுவித்த போது, தமிழர் கழகம் என்று தான் பெயரிட்டார். அப்போதுள்ள சூழலில் தமிழர் இயக்கம் என்றால், ஆரியர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பதால், திராவிடர் கழகம் என தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. தமிழர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் யாரும் குரல் கொடுக்கவில்லை என்றால், நாங்கள் ஏன் குரல் கொடுக்க வேண்டும். எனவே, திராவிடம் இப்போதைய சூழலுக்கு பலன் தராது.
அப்படியென்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள்?
பெரியாரின் கொள்கைகள் இல்லாமல் எங்களால் உயிர் வாழ முடியாது. பெரியாரை கைவிட்டு எங்களால் இருக்க முடியாது. நாங்கள் பெரியாரின் பேரன்கள். தனது 95வது வயதில், மூத்திர பையுடன் சுற்றித்திரிந்தவர் பெரியார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’ எனக்கூறிய பெரியார் ஊற்றிய இன உணர்வும், மான உணர்வும் எங்களிடம் உள்ளது. பெரியாரையோ, பெரியார் கொள்கைகளையோ கைவிட்டு விடுவேன் என யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் பெரியாரின் பேரன்கள்.
தமிழர் தேசிய இயக்கம் துவங்கியுள்ளதால், இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் எதிராக சித்தரிக்கப்பட்டுள்ளீரே?
யாரை சொல்கிறீர்கள் என்னையா? தமிழ் தேசிய இயக்கம் துவங்கினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க முடியாதா? இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவேனா. யார் சொல்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினர் மக்களுக்கு பாடுபடுவது தான் எங்கள் நோக்கம்.
பிரபாகரன்?
தந்தை பெரியாரின் கனவுகளை, நனவாக்கி காட்டியவர் பிரபாகரன். ஜாதி ஒழிய வேண்டும் என்றார் பெரியார். ஈழத்தில் அதனை செய்து காட்டினார் பிரபாகரன். ஈழத்தில் ஜாதி இல்லை. பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என வலியுறுத்தினார் பெரியார். அதனை நடத்தி காட்டி, பெண்களுக்கு சமஉரிமை வழங்கினார் பிரபாகரன். இப்படி பெரியாரின் கனவுகளை நனவாக்கியவர் பிரபாகரன். ‘அடிமையாக வாழ்வதை விட சுதந்திரமாக வாழ்வதே சரி’ என 22 பேருடன் சண்டையை துவக்கியவர் எங்கள் தலைவர். அவரை நான் நேரில் சந்தித்த தருணங்கள் சிலிர்ப்பானவை. அவரை மீண்டும் காண்பேன் என்பது மட்டும் உறுதி.
காங்கிரஸ் எதிர்ப்பு ஏன்?
நான் காங்கிரஸ். எனது சகோதரர் காங்கிரஸ். எனது குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தேச விடுதலைக்கு போராடிய கட்சி என காங்கிரசை கொண்டாடி வந்தோம். கை சின்னத்தை கொண்டாடினோம். ஆனால் அதே கை சிங்களனுக்கு துணை போய், எங்கள் சகோதர்களான ஈழத்தமிழர்களை கொன்று சாய்த்ததே அதன் பின்னர் எப்படி அவர்களை ஆதரிப்பது. ‘சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரசை கலைத்து விடுங்கள்’ என மகாத்மா காந்தியிடம் கேட்டார் தந்தை பெரியார். ஆனால் பெரியாரின் கொள்கைகள் ஏற்கப்படவில்லை. அவ்வாறு பெரியாரின் கொள்கை ஏற்கப்பட்டிருந்தால், இந்தியா எப்போதே வல்லரசாகியிருக்கும். சிங்களனுக்கு துணை போய், தமிழனை கொன்ற காங்கிரசை எதிர்க்காமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்.
தமிழக அரசின் செயல்பாடு?
ரூ.1க்கு அரிசி என்பதை சாதனையாக கூறி வருகிறது தமிழக அரசு. ரூ.1க்கு அரிசி வாங்கும் அவலநிலைக்கு தள்ளியிருப்பது சாதனையா? வேதனையா?. இந்த தேசத்தை நாசமாக்கிய சொல் இலவசம். ‘இலவசம் வேண்டாம் என எப்போது மக்கள் சொல்கிறார்களோ. அப்போது தான் நாடு வளர்ச்சி பெற்றதாக பொருள். இங்கும் எதுவும் இலவசம். தமிழர்களின் உயிரும் கூட. அரிசி, பருப்பு, ஆடு, கோழி இறைச்சி என அனைத்தையும் விட மலிவாக கிடைக்கிறது தமிழக மக்களின் உயிர். பெரியாரின் வழி வந்தவர்கள், அவரை மறந்து விட்டார்கள் என்பது மட்டும் உண்மை.
தமிழ் மொழி பயன்பாடு?
நானும் ஆங்கில மொழியை கலந்து பேசியவன் தான். ‘என் தாய் மொழியை நான் பேசாமல் எந்த நாய் பேசும்’ என எனக்குள் நான் கேட்டுக்கொண்ட கேள்விதான் என்னை தமிழ் மொழியில் பேச வைத்தது. தமிழகத்தில் நாம் பேசுவதில் பாதி சமஸ்கிருதம். பாதி ஆங்கிலம். தமிழ் பெயர் யாருக்கும் வைப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் ஓடுகின்ற ஓட்டத்தில் மாற்றி விடலாம். தமிழில் பேசினால் மதிப்பதில்லை என்கிறார். மதிக்காதவனை மிதியுங்கள். தமிழை உயிருக்கு இணையாக மதியுங்கள். நாக்கை திருத்த முடியாத தமிழன் நாட்டை எப்படி திருத்த முடியும். ஆங்கிலம் பேசுங்கள் தவறில்லை. வெளிநாட்டினரிடம் நீ தமிழில் பேசினால் முட்டாள். ஆனால் உன் உறவுகளிடம் நீ ஆங்கிலத்தில் பேசினால் மகா முட்டாள். ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும், தமிழை தமிழாகவும் கலப்பின்றி பேசுங்கள். இனி எப்போதும் தமிழிலேயே பேசுவோம் என முடிவெடுப்போம்.
நாம் தமிழர் இயக்கத்தின் அடுத்த கட்டம்?
அரசியல். கட்சியாக மாறி, அரசியலை வென்றெடுப்பது தான். பிறருக்கு வாக்களித்து, வாக்களித்து ஓய்ந்தது போதும். உனக்கு நீயே வாக்களித்துக்கொள்ளும் நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும். இன்னும் ‘நாம் தமிழர் இயக்கம்’ சாதிக்க உள்ளது எண்ணிலடங்காது. காத்திருந்து பார்த்துக்கொண்டே இருங்கள் நாம் தமிழர் இயக்கத்தின் வளர்ச்சியை.

September 18, 2009

உன்னைப்போல் ஒருவன் (திரை விமர்சனம்)

‘எனக்கு பின்னால் வருபவர்கள் என்னைப்போல் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்’ தந்தை பெரியாரின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது ‘உன்னைப்போல் ஒருவன்’. தீவிரவாதத்தை எதிர்க்க தீவிரவாதமே தீர்வு என பொட்டில் அறைந்து கதை சொல்கிறது படம்.
தீவிரவாதத்துக்கு எதிராக கிளம்பும் சாமானியன் தான் கதையின் நாயகன். அரசு பேருந்து, வணிக வளாகம், ரயில், காவல் நிலையம் என அடுத்தடுத்து பல இடங்களில் பேக் ஒன்றை வைத்து விட்டு, கட்டுமான பணி நடந்து கொண்டுள்ள கட்டடத்தின் மேலே செல்கிறார் கதையின் நாயகன். லேப்டாப், செல்போன் என அதிநவீன சாதனங்களுடன், சென்னை மாநகர காவல்துறை ஆணையரை தொடர்பு கொள்ளும் நாயகன், மாநகரில் 5 இடங்களில் சக்தி மிக்க வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டுகிறார். வெடிக்காமல் இருக்க வேண்டுமானால், குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கிறார். வேறு வழியின்றி காவல்துறையால் விடுவிக்கப்படும் தீவிரவாதிகளை சாதூர்யமாக கொல்கிறார் நாயகன்.
கதையின் நாயகனாக கமலஹாசன். காட்சிக்கு காட்சி மிக சிறந்த நடிப்பால் ஈர்க்கிறார். புகார் அளிக்க செல்லுமிடத்தில் காவல் அதிகாரியிடம் பேசும் போதும், பெண் கருவறுக்கப்பட்ட காட்சியை போனில் விவரிக்கும் போதும், நீ எந்த மதத்தை சேர்ந்தவன் என கேட்கும் போது கோபப்படும் இடத்திலும் என காட்சிக்கு காட்சி பன்முக நடிப்பால் கவர்கிறார் கமலஹாசன்.
இவருக்கு இணையாக நடித்துள்ளார் மோகன்லால். மாநகர காவல்துறை ஆணையாளராக வரும் மோகன்லால். கமலஹாசனுடனான் உரையாடலின் போதும், தலைமை செயலாளர் லட்சுமியுடன் இது தொடர்பாக விவாதிக்கும் போதும் என படம் முழுவதும் நிஜ காவல்துறை அதிகாரியாக கண்முன் நிற்கிறார்.
படத்துக்கு மிகப்பெரிய பலம் வசனங்கள். படம் துவங்கி 10 நிமிடங்களுக்கு பிறகு வரும் ‘உன் மேல என்ன கோபம். கோபப்பட மொத்த நாடே இருக்கு’ என்ற வசனத்தில் துவங்குகிறது படத்தின் விறுவிறுப்பு. தொடர்ந்து படம் முழுவதும் வசனங்களின் ஆக்கிரமிப்பு தான். ஒவ்வொரு வசனங்களும், மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
‘அதென்ன நான் இந்துவோ, முஸ்லீமாவோ தான் இருக்கணுமா, கிறிஸ்துவனா, கம்யூனிஸ்டா, நாத்திகனா இருக்க கூடாதா’ என்பதில் துவங்கி அடுத்தடுத்து வரும் வசனங்கள் மத வெறியை கடுமையாக சாடுகிறது.
‘சொல்றதை தமிழ்ல சொல்லு, முதல்வர் டி.வி. பாத்துட்டு இருக்கார்’ என பேட்டி கொடுக்கும் அதிகாரியிடம் கமிஷனர் சொல்வது; ‘கீழே விழுந்துடுச்சுன்னு விட முடியலை. விலைவாசி ஏறிடுச்சுல்ல’ என கீழே கிடந்த தக்காளியை எடுக்கும் கதைநாயகன், ‘நாங்க கஷ்டப்பட்டு புடிச்சுட்டு வருவோம், தீவிரவாதியோ, அரசியல்வாதியோ ஒரு போன்ல விடுவிச்சுருவீங்க’ என கொந்தளிக்கும் கமிஷனர் என படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் நடைமுறையை அம்பலமாக்குகிறது.
படத்தின் முக்கிய காட்சி. தீவிரவாதிகளை கொல்வது ஏன் கமல் விவரிக்கும் காட்சிகள். கண்களை நீர் வழிய, பெண் ஒருவர் கருவழிக்கப்பட்ட காட்சியை விவரித்து விட்டு, கண்ணில் வழியும் கண்ணீரை துப்பாக்கியால் துடைக்கும் காட்சி படத்தின் மொத்த கதையையும் சொல்லி விடுகிறது. ‘தீவிரவாதத்தை அழிக்க தீவிரவாதம் தான் வழி’ என அடுத்து வரும் வசனம் அந்த காட்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது.
படத்தின் இசை, காவல்துறை அதிகாரிகளின் நடிப்பு அனைத்திலும் குறையேதும் இல்லை. உலக சினிமாக்களுக்கான தரத்தில் அமைந்துள்ள ‘உன்னைப்போல் ஒருவன்’ தமிழ் சினிமாவின் மைல் கல்.

August 21, 2009

கந்த............சா......மி....

இயக்கம் : சுசிகணேசன் நடிப்பு : விக்ரம், ஸ்ரேயா, பிரபு, ஆசிஷ்வித்யார்த்தி, ஒளிப்பதிவு : என்.கே. ஏகாம்பரம் தயாரிப்பு : கலைப்புலி எஸ் தாணு
‘இருப்பவனிடம் பிடுங்கி, இல்லாதவனுக்கு கொடுப்பது’ என்ற மிகவும் பழக்கப்பட்ட ஷங்கர் பாணி கதையை படமாக்கியிருக்கிறார் சுசிகணேசன்.
திருப்போரூர் முருகன் (கந்தசாமி) கோயிலில் கணவரின் அறுவைசிகிச்சைக்கு ரூ.60 ஆயிரம் வேண்டும் என வேண்டுகிறார் பெண் ஒருவர். கோரிக்கையை மரத்தில் எழுதி கட்டினால் கோரிக்கை நிறைவேறும் என கோயில் பூசாரி கூற, அதனை கட்டி செல்கிறார் அந்த பெண். இதையடுத்து அவரது கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. கோரிக்கையை நிறைவேற்றியது, வேறு யார் ஹீரோவே தான்.
தொடர்ந்து இந்த தகவல் ஊர் முழுவதும் பரவ கோயிலில் பக்தர்கள் கூட்டம் திரள்கிறது. பக்தர்களின் கோரிக்கை முழுவதும் நிறைவேற, இதில் சந்தேகம் கொள்கிறது உளவுத்துறை. ‘சாமி செய்யது, செஞ்சா ஆசாமி தான் செய்யனும்’ என கூறி இதனை விசாரிக்க உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக பிரபு அங்கு வருகிறார். இது ஒருபுறம் இருக்க கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வைத்து, அதிரடி சோதனை நடத்தி வேட்டையாடுகிறார் ஹீரோ விக்ரம். இதில் சிக்கும் பண முதலைகள், ஹீரோவுக்கு எதிராக சதிவலை பின்னுகிறார்கள். இறுதியில் இவர்களில் ஒருவரிடம் அவர் சிக்குகிறார். அவர்களிடம் பின்னணியையும் ஹீரோ விளக்குகிறார்.
‘நாங்கள் 11 பேர். கிராமத்தில் படிச்சோம். மேல் படிப்பு படிக்க சென்னை வந்தோம். பணக்காரர்களால் பாதிக்கப்பட்டு, ஏழை, பணக்கார இடைவெளியை குறைக்க முடிவெடுத்தோம்’ என காக்க காக்க ஸ்டைலில் பிளாஷ்பேக் கூறுகிறார் விக்ரம். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது கிளைமேக்ஸ். ஜென்டில்மேன், அந்நியன், முதல்வன், சாமுராய், சிவாஜி என பார்த்து சலித்த படத்தின் கதையை குழப்பி அடித்து கொடுத்திருக்கிறார் சுசிகணேசன். ‘அட இது ஜென்டில்மேன்’, ‘இது சிவாஜி’ என கந்தசாமி படம் பார்க்கும் நமக்கு மற்ற படங்களையும் நினைவூட்டுகிறார் இயக்குனர். கிராமத்தில் படிக்கும் 11 பேர் சென்னை வந்தது சரி. பணக்காரர்களை எதிர்க்க முடிவு செய்தது சரி. அது எப்படி எல்லோரும் சி.பி.ஐ., உளவுத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு, க்யூ பிராஞ்ச் என முக்கிய பிரிவுகளில் வேலைக்கு சேர்ந்தாங்க சரி விடுங்க. இப்படி படம் முழுக்க ஏகப்பட்டட லாஜிக் மீறல்கள்.
2.30 மணி நேரத்தில் முடிய வேண்டிய படம், 3.15 மணி நேரம் ஓடுவது பெரிய மைனஸ். ஸ்ரேயா. அவரது உடைகளுக்கு ரூ.1.75 கோடி செலவாம். நடிக்க எவ்வளவோ. ஆனால் இரண்டிலும் தயாரிப்பாளர் ஏமாற்றப்பட்டுவிட்டாரோ என தோன்றுகிறது. இந்த உடைக்கா இவ்வளவு செலவு, இவரது நடிப்புக்கா சம்பளம் என நம்மை ஏகத்துக்கும் எரிச்சலூட்டுகிறார் ஸ்ரேயா. வடிவேலுவும் அதே ரகம். ஏற்கனவே வேகமின்றி பயணிக்கும் படத்தின் வேகத்தை இன்னும் குறைக்கிறது வடிவேலுவின் காமெடி. படத்தில் மிகப்பெரிய ஆறுதல் தொழில்நுட்பம்.
ஒளிப்பதிவில் பின்னி எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். இயற்கை, ஈ என ஏற்கனவே அசத்தல் படங்களை வழங்கிய ஏகாம்பரத்துக்கு ஏகத்துக்கும் தீனி போட்டிருக்கிறது ‘கந்தசாமி’. இசை ஓகே ரகம். பல இடங்களில் பின்னணி இசை எரிச்சலூட்டுகிறது. போலீஸ் ஆபிசராக பிரபு, வில்லனாக வரும் ஆசிஷ்வித்யார்த்தி, அவரது பி.ஏ. ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார்.
ஹீரோ உள்ளிட்ட 11 பேரின் இந்த ராபின் ஹ¨ட் அவதாரத்துக்கு பின்னணியை வலுவாக சொல்லாமல் தப்பியது; மிக மெதுவான திரைக்கதை; ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத கதைக்களம், தேவையில்லாத நீளம் என ஏகப்பட்ட சளிப்புகளுக்கிடையேயும், படத்தின் கமர்சியலான காட்சியமைப்பு ஆறுதலை தருகிறது. சில இடங்களில் முன்னிறுக்கை நோக்கி நகரும் காட்சிகளும் படத்தில் இருக்கத்தான் செய்கிறது.
ஏற்கனவே கறுப்பு பணத்துக்கு எதிராக ‘சிவாஜி’ ரஜினி போராடிய போதும், கறுப்பு பணம் ஒழியவில்லை போலும், அதான் கந்தசாமி பிறந்திருக்கிறார். சினிமாத்துறையினரெல்லாம் கறுப்பு பணத்தை பற்றி படம் எடுத்தா எப்படி சாமி. சரி அது எதுக்கு நமக்கு. என்னமோ பல கோடியை வாரி இரைத்து ஏழ்மையை போக்க முயன்றுள்ள கலைப்புலி தாணுவை கந்தசாமி காப்பாத்துமா?.

July 28, 2009

கோவை சாதி கட்சியினருக்கு . . .

‘‘ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற்கென்றும், மற்ற பலர் வேதனைபடுவதற்கென்றுமே அமைக்கப்பட்ட சாதிமுறைகள், இந்நாட்டை விட்டு அகலும் வரை நமக்குள்ள கொடுமைகள் நீங்காதென்பது திண்ணம்’’. சாதி வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்த புரட்சிகாரர் ‘தந்தை பெரியார்’ உதிர்த்த சொற்கள் இவை.
சாதியின் பெயரால் மிருகங்களாக நாம் மாறி வருவதை உணர்த்த இவ்வார்த்தைகளை பிரயோகித்தார் பெரியார். ஆனால், இப்போது சாதியின் பெயரால் முளைத்து மனிதர்களை மிருகங்களாக்கும் முயற்சியை செவ்வனே செய்து வருகின்றன சாதி கட்சிகள்.
இந்த பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது கோவை மண்டலத்தை நம் இனத்துக்கான மண்டலம் என கூறிக்கொள்ளும் சாதி கட்சி ஒன்று. தாங்கள் சார்ந்த சாதியின் பெயரால் பேரவை என்ற பெயரில் பலரை வேதனைக்குள்ளாக்கும் வகையில், சாதி வெறியை பரப்பி வந்த அமைப்பு ஒன்று, மற்றவர்கள் வேதனைக்குள்ளாவதோடு தாமும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் அதனை அரசியல் கட்சியாக மாற்றிக்கொண்டது.
ஒரு தேர்தலை சந்தித்து, அவர்களை சார்ந்த இனத்தினரிடம் சாதி வெறியை பரப்பிய அக்கட்சியின் அடுத்த கட்ட இலக்கு, தமிழகத்தையே திக்குமுக்காட வைத்துள்ளது. கோவை மண்டல பகுதிகளை தனிமாநிலமாக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. நாட்டின் நாளைய தூண்களான மாணவர்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது இந்த கோரிக்கை.
‘‘நான் முதல் அமைச்சராக வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து கொங்கு நாடு தனி மாநிலமாக என்று பிரிகிறதோ அன்று தான் முதல் அமைச்சராவேன்,’’ என்ற பேச்சில் துவக்கி பிரிவினை கொள்கையை விதைத்துள்ளார் அக்கட்சியின் தலைவர்.
‘கொங்கு நாடு’ என்று இவர்கள் கூறுவது இவர்கள் இனத்தினர் மட்டும் வாழும் பகுதி அல்ல. பல்வேறு இனத்தினரும் ஒன்றாக இணைந்து வாழும் பகுதி. இவர்கள் இனத்தினர் சற்று கூடுதலாக உள்ளனர். அவ்வளவு தான். அப்படியிருக்க இவர்கள் வலியுறுத்துவது இந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் எப்படி பயன்படும்.
‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்; கொத்தடிமைக்கு எதிரான சட்டம் வேண்டாம்’ என கட்சிக் கூட்டங்கள் தோறும், ஒடுக்கப்பட்ட இனத்துக்கெதிரான சாட்டையை சுழற்றி உங்களால் அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கிட்டும்.
தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட காரணத்தினால் நீலகிரியில் போட்டியிட மறுத்து, செய்தியாளர்களின் தொடர் கேள்விகளால், வேறு வழியின்றி கடைசி நேரத்தில் ஏதோ ஒரு வேட்பாளரை அறிவித்து, அந்த வேட்பாளருக்கு உரிய மரியாதை அளிக்காமல் புறக்கணித்த நீங்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்களை எப்படி மரியாதையுடன் நடத்துவீர்.
கொங்கு ................ என சாதி பெயரை நீட்டி முழங்கி பேசும் உங்களால், மற்ற சாதி வேறுபாடு பாராமல் எப்படி பணியாற்ற முடியும்.
சாயப்பட்டறைக்கு தீர்வு; கள் இறக்க அனுமதி என உங்கள் இனத்தினரின் பிரச்னைகளை வலியுறுத்தும் நீங்கள், துப்புரவு தொழிலாளிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட இனத்துக்கான ஒரே ஒரு கோரிக்கையை கூட இதுவரை முன்னிறுத்தாதது ஏன்.
தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறை அதிகம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது உங்கள் கொங்கு நாடு. இதற்கு எதிராக குரல் கொடுப்பீரா நீங்கள்.
‘தமிழ்நாட்டில் சேர்ந்து இருக்கும் வரை கொங்கு நாடு முன்னேறாது’. உங்கள் தலைவர் உதிர்த்த வார்த்தைகள் இவை. தமிழகத்தில் இருக்கும்வரை அல்ல. உங்கள் கட்சி இருக்கும் வரை என மாற்றிக்கொள்ளுங்கள். ‘நம்முடன் ஒப்பிடுகையில் மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு. மிருகங்களுக்கு ஒரு அறிவில்லாததின் பயன் சாதி இல்லை. நமக்குள்ள இழிவு சாதியால் தான்’ என்றார் தந்தை பெரியார். கொங்கு நாடு என அழைக்கும் பகுதிக்கான இழிவு உங்களால். உங்கள் சாதியால்.

July 10, 2009

தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரின் துரோகங்கள்!

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் நம் தமிழின தலைவர், தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் செய்த துரோகங்கள் பற்றி சொல்லாதவர்கள் இருக்க முடியாது. கலைஞரின் தம்பியாக இருந்த வைகோவில் துவங்கி, தோழனாக இருந்த பழ.நெடுமாறனில் இருந்து, கடைசி நேரத்தில் கை விலக்கி ஓடி வந்த ராமதாஸ் வரை கூறாதவர்கள் இல்லை. ஆனால், இவர்களில் யாரும் கூறாத துரோகங்களை பட்டியிலிட்டுள்ளார் நம் ஆறரை கோடியில் ஒருவர். கலைஞர் காலத்திலும், பெரியார், அண்ணாவின் தொண்டனாக வாழ்ந்து அவரை பின்பற்றும் அந்த நபரின் கடிதம் இந்த வார ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. கடிதம் என்பதை முதல்வரை நோக்கிய கேள்விக்கணைகளாகவே இதனை கருதுகிறேன். கண்டிப்பாக முதல்வரிடம் பதில் கிடைக்காத இந்த கேள்விகள். ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் படிக்க வேண்டிய கடிதம். இதோ அந்த கடிதம். 15/07/09ம் தேதியிட்ட ஆனந்த விகடனில் பிரசுரமான "கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்' என்ற தலைப்பில் வெளியானவை உங்களின் பார்வைக்கு... தி.முக. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்! மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை "முள்கிரீடம்' தாங்கி, முத்துவிழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன். நீ இன்றி நான் இல்லை படத்துக்கு கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகி விட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. "கருணாநிதி என் புத்தக தலைப்பை திருடி விட்டார்' என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால், <உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்... ""போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்!! கறுத்த கழுதையே அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையே, கிலி பிடித்த மனிதர்களை கீறி எறியுங்கள்!'' என்று கோவில் பட்டியிலும்... ""உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களை போக்கினால்... போகட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக் கொள்ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினை துண்டித்து நிர்க்கதியாய் விட்டாலும், எமது தன்மானம், இனமுழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்'' என்று கோவையிலும்,, ஒரு காலத்தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதை படித்ததும்தான் பதறிப்போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுத துõண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான். சம்பத்தும் நெடுஞ்செழியனும், அன்பழகனும் கழக மேடைகளில்(உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்த போது... எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால், ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பை பெற்றீர்கள். சரியா? இப்போது ஈழத்தமிழர் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசியதை திரும்ப திரும்ப படித்தேன். ""எதிலும் ஒரு நீக்குப் போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இ ங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை <உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல்பேச்சு, கடல் அலைப்பேச்சு, எரிமலைப்பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று பேசியிருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு! 30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப்படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்கு தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள் தான் ""தமிழனுக்கு ஒரு நாடு; தனித் தமிழீழ நாடு'' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக் கறை படித்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டு தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து... பிறந்த நாளுக்கு கிடைத்த பணத்தைப் போராளிகளுக்கு துõக்கி கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனித சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி துõக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து... என பாழாய்ப் போன ஈழத்தமிழனுக்காக காலத்தை வீணாக்கி விட்டீர்கள் தலைவரே! எம்.ஜி.ஆர்., நாலு கோடி ரூபாயை துõக்கிக் கொடுத்து, பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். ""இந்த சண்டையை நடத்துவதே, எம்.ஜி.ஆர்., தான்'' என ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும், வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான், போராளி இயக்கங்கள் நம் பின்னால் தமிழ்நாடே இருக்கிறது' என்று திரிந்தன. ""கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டுவந்தான் செங்குட்டுவன். காவிரிக்கு க ரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களை கைதிகளாக கொண்டு வந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகறாக நாம் இருக்கிறோமா? இனிப்பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தை துõக்குவதாக என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை'' என்று நீக்குப் போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால், கோபமான வெளத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப்பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா? "இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய் தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதை எல்லாம் சகித்துக் கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது?நாங்கள் ஒட்டிக் கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியாவேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக் கொண்டு இருக்க, நீங்கள் தமிழருக்கு செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்று விடுகிறதே என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா? என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல்பேச்சு பேசாமல் இருந்திருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே? இன்றைய வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத்தை விட, அதிகமாக அன்றைய அமைச்சர்கள் காளிமுத்துவும், எஸ்.டி., சோமசுந்தரமும் பேசினார்களே! "இந்தியா படையெடுக்க வேண்டும்', ஜெயவர்த்தனாவை துõக்கிலிட வேண்டும்' என்றார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் போட்டுக் கொடுத்தார்கள். புறநானுõற்றுப் பாடல்களை ஒப்பிக்காத, கணைக்கால் இரும்பொறையின் மறம் அறியாத எம்.ஜி.ஆர்., சிரித்துக் கொண்டே சொன்னார், ""அவர்கள் பேசியது என்னுடைய கருத்துதான். அவர்கள் அளவுக்கு எனக்கு வீரமாக பேச வரவில்லை'' பேச்சு என்பது வெறும் பேச்சுதானே என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் நீங்கள், ""மிசாவைக் காட்டி மிரட்டினால், தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்'' என்றபோதும் கவலைப்படாமல் இருந்தார். அன்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தீர்கள். இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள். பிடிக்காததை யார் பேசினாலும், வேண்டாத வீரமாகத் தெரிகிறது. பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று!முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, சிங்களவர்களை கோபப்படுத்த வேண்டாம்' என்று இலங்கைத் துõதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? ""வெள்ளை பாஸ்பரஸ் துõவுகிறான், கிளஸ்டர் போடுகிறான், கொத்துக் குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டிருக்கும்போது, உங்கள் அதிகாரத்தை வைத்து தடுக்கக் கூடாதா?'' என்றால், "என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்'' என்று தட்டிக் கழித்தீர்கள். ""போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது'' என்ற போதும், மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக் கொண்ட போது, காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது "மத்திய அரசு என்ன செய்ய முடியும். சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்' என்று பந்தை கடல் தாண்டி தட்டி விட்டீர்கள். நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதார தடை விதிக்க வேண்டும். போர்க்குற்றத்தை உலகநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக்கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா? இப்போதைய உங்கள் சிந்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கி விடுங்கள்! இலங்கைப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன? ""மத்திய அரசின் கருத்துதான் என் கருத்து'' தமிழீழம் குறித்து உங்கள் கருத்து என்ன? ""இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்துதான் என் கருத்து''. பிரபாகரனை உயிரோடு பிடித்தால் எப்படி நடத்த வேண்டும்? ""ஜெயலலிதா தீர்மானம் போட்டபடி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்'' உங்களுக்கு என்று இப்போதெல்லாம் எந்த சொந்தக் கருத்தும் கிடையாதா? "தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான், இலங்கையில் தமிழர் அரசு அமைந்தால் சந்தோஷம்' என முற்றும் துறந்த முனிவர் போல தத்துவம் பேசுவது உதவுமா? நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டது முதல் மே இரண்டாவது வாரம் வரை, எட்டு மாதங்கள் நத்தை போல நகர்ந்ததில், நசுங்கிய உயிர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம், எட்டுத்தடவை தீர்மானம் போட்டு என்ன செய்ய முடிந்தது? நாங்கள் போரின் அன்றாடத் தகவல்களை தினமும் இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம்' என கோத்தபய ராஜபக்ஷே சொன்ன பிறகும், காங்கிரஸைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்ட முடியாமல், <உங்களைப்பிடித்து இழுத்தது எது? அல்லது யார்? ""நாங்களே அடிமையாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடியும்'' என்று ஈழத்தந்தை செல்வாவிடம், இங்கிருந்த தந்தை பெரியார் சொன்னதாக நீங்களும் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உடல் வலியெல்லாம் தாங்கிக் கொண்டு, மூத்திரப் பையை துõக்கிக் கொண்டு கடைசி காலத்திலும் கருவறைப் போராட்டம் நடத்திய "தமிழன் அடிமை' அவர். கடைசி வரை அதிகாரம் கொண்ட பதவி எதையும் திரும்பிக் கூட பார்க்காத அடிமை அவர். ஆனால், நீங்கள் ஐந்தாவது முறையாக முதலமைச்சர். 14 ஆண்டுகள் உங்களது ஆட்கள் மத்திய லகானை சுழற்றி வந்திருக்கிறார்கள்.சோனியாக உங்களை தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறார். மத்திய மந்திரிகள் யார் வந்தாலும், கோபாலபுரத்தில் லேண்ட் ஆகிறார்கள். நீங்கள் அடிமை என்றால், கொத்தடிமைகளை என்னவென்று அழைக்கலாம்? அண்ணா, தனிநாடு கைவிட்ட கதையைச் சொல்லிச் சொல்லி அண்ணாவும் அப்படித்தான் என்று இன்றைய தலைமுறைக்கு காட்டிக்கொடுக்கிறீர்கள். எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணா பெயரை சொல்லி ஏன் பலியிடுகிறீர்கள்? கச்சத் தீவை தாரைவார்க்கும் போது கடிதம் மட்டும் அனுப்பியதால், இன்று கண்காணிப்புக் கோபுரம் வந்து விட்டது. காவிரியில் தண்ணீர் விடுவதில் உச்ச நீதிமன்றம் தொடங்கி காவிரி ஆணையம் வரை தீர்ப்பளித்த பிறகும், "விரும்பினால்தான் தண்ணீர் த ருவோம்' என்று சொல்லும் நிலையே இன்னமும் தொடர்கிறது. தெற்காசியாவின் அதிசயமாக பென்னிகுக் அமைத்த முல்லைப் பெரியாறு அணையை மார்க்சிஸ்ட் மந்திரி குடைவைத்து தட்டிப்பார்க்கிறார், கீறல் விட்டு உள்ளதா இல்லையா என்று. அச்சுதானந்தனுக்கு ஆயிரம் தலைவலிகள் இருப்பதால், அவருக்கு கோபம் வருவது மாதிரி எதையாவது சொல்லி விடாதீர்கள். பாலாறு பிரச்னையை கிளற வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை ஆந்திர அரசு அடக்கி முடித்த பிறகு, ஆற அமர பேசலாம். எந்தத் தேதியில் எந்த ஒப்பந்தம் போட்டோம் என்று மனப்பாடமாக துரைமுருகன் ஒப்பிக்க மட்டும்தான் காவிரியும் பாலாறும் முல்லைப் பெரியாறும் பயன்படப் போகிறது. ""பஞ்சாப் பாஸ்பரஸ், காஷ்மீர் கற்பூரம், அசாம் அணையாவிளக்கு, ஈர விறகு இங்குள்ள தமிழினம்'' என்று புதுக் கல்லுõரி விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன் புது விளக்கம் கொடுத்தவர் நீங்கள். விறகை ஈரமாகவே வைத்திருக்கலாம் என்று இப்போது நீங்களாகவே சொல்கிறீர்களே... எதை எதில் சேர்ப்பது? கடைசியாக இன்னொன்றும் நினைவுச் சரத்தில் நெருடுகிறது.... ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நுõற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க., மாநாட்டின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், "நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப்பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே? அன்புடன், ஈரவிறகாக இருக்க முடியாத, அரசியல் அறியாத் தமிழன்! நன்றி ஆனந்தவிகடன்.

July 8, 2009

தோற்பது மட்டுமே!

நம் இருவருடனான விளையாட்டில் இதுவரை
தோற்பது மட்டுமே என் பணியாக இருந்து வருகிறது

இருவரில் கோபப்படுவது நீயோ, நானோ சமாதானப்படுத்துவது மட்டும் எனது செயலாக இருந்தது

சிரிப்பு, அழுகை, கோபம், எரிச்சல் என நம் எண்ண பகிர்தலின் வழிகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தது நீ தான் என்றாலும் விளைவுகள் மட்டும் என்னை சார்ந்தே அமைந்திருந்தது. உன்னுடனான ஏழு ஆண்டு பழக்கத்தில் குற்றங்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் மன்னிப்பு கேட்பது என் கடமையாகவே மாறிப்போனது.

செயல்கள் எல்லாம் உனதாயிருந்ததால் விளைவுகளாக மட்டுமே இருக்க விரும்பினேன் நான்.

உன்னை விட்டு பிரிந்த பின்னர் இதுவே பிரச்னையாய் போனது எனக்கு.

உன் நினைவுகளை அழித்தல்; உன்னை நினைக்காமல் இருத்தல் என எந்த செயலையும் என்னால் செய்ய இயலவில்லை.

மாறாக உன் நினைவுகள் என்னுள் ஏராளமான விளைவுகளை ஏற்படுத்தின.

கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடனான தொடர்பை முற்றிலுமாக நீ துண்டித்துக்கொண்ட நிலையிலும் உன் நினைவுகளை இழக்க இயலவில்லை என்னால்.

கடவுளிடம் வேண்டும் பக்தன் போல உன்னிடம் கேள்விகளை மட்டும் முன்னிறுத்தினேன் பதில்கள் கிடைக்காது என தெரிந்தும். எல்லாவற்றையும் உணர்ந்தவனாக இந்த ஆண்டு உந்தன் பிறந்த நாளுக்கு உன்னை வாழ்த்துவதில் என தீர்க்கமாய் முடிவெடுத்தேன் என் வாழ்த்தை ஏற்க விரும்பாத ஒருவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதா? என காரணங்களை துணைக்கழித்துக்கொண்டேன்.

இதோ நீ பிறந்த அந்த நாள் வந்தது நாட்காட்டிகள் அவசியமில்லாமல் எனக்கு உணர்ததின உன் பிறந்த நாளை.

கண்டிப்பாக வாழ்த்த கூடாது என முடிவெடுத்தேன். மறந்தும் உனக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க கூடாது என அடிக்கடி எனக்கு நானே கட்டளையிட்டுக்கொண்டேன்.

நள்ளிரவு வரை உறக்கம் கலைந்தாலும் அதிகாலை அவசரமாய் எழுந்து உன் நினைவுகளை மறக்க பரபரபாக்கினேன் இந்த நாளை.

அலுவலக கடிதம் எழுத, அவசரமாய் வெள்ளைக்காகிதம் எடுத்து எழுத துவங்கினேன். காகிதத்தில் கடிதத்துக்கு பதிலாய் வேகமாக பதிந்தது உன் பிறந்தநாள் கவிதை.

என்ன செய்ய? நம் இருவருடனான விளையாட்டில் இதுவரை தோற்பது மட்டுமே என் பணியாக இருந்து வருகிறது

May 21, 2009

இது எப்படி இருக்கு?

படத்துக்கு விளக்கம் வேணுமா என்ன?

எவ்வாறு வெளியேறினர் தலைவர்?

டகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள இராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்.
புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.
போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.
தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்
தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார். இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 30க்கும் அதிகமான
கரும்புலிவீரர்கள்
5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர். தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.
சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்
புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர். அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை. இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள் புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது. இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள்
சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.
ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன. அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.
ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.
"மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்" என தனது
சகாக்களிடம் தெரிவித்த கருணா
வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.
சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, "மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார். தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி
இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.
பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.
கமலின் "தசாவதாரம்" திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது
தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.
சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.
தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி : தமிழ்வின்

May 18, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் : பத்மநாதன்

  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். 
  பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். 
கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 
இதனையடுத்து ஜரோப்பியவாழ் தமிழர்கள் பெரும் மனச்சோர்வடைந்து குழப்பத்தில் காணப்பட்டனர். இந்த ஒட்டுக் குழுக்கள் தமது இணையத்தளம் மூலம் இப்பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். 
எனவே தமிழீழ உறவுகளே இலங்கை அரசின் கூலிப்படைகள் நடாத்தும் இணையங்களை சென்று பார்வையிடுவதை நிறுத்துங்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை.
நன்றி : தமிழ்வின்

தலைவன் இருக்கிறான் : வதந்திகளை நம்பாதீர்

 தமிழ் மக்களுக்கு பாதகமான பல தகவல்களை சிங்கள படையினர் பரப்பிவருவதனால் தமிழ் மக்களை வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முள்ளியவாய்க்கால் பகுதியில் சிங்கள படையினரின் தாக்குதலில் தலைவர் உட்பட பல தளபதிகள் கொல்லப்பட்டதாக சிங்கள படையினர் வதந்தியான தகவல்களை தமது ஊடகங்கள் மூலம் பரப்பிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வன்னியில் எஞ்சியுள்ள மக்களை முழுமையாக அழித்து தான் மேற்கொள்ளும் மிக மோசமான படுகொலையை வெளியுலகிற்கு மறைப்பதற்காக பல்வேறு கதைகளை அது கட்டவிழ்த்து விட்டுள்ளது.  சிறிலங்காவின் இந்தப் பிரச்சாரத்தில் மூழ்கியுள்ள சர்வதேச ஊடகங்கள் அங்கு கொல்லப்படுகின்ற மக்களின் நிலை குறித்து எந்தவித கருத்துக்களையும் வெளியிடாது, சிறிலங்கா வெளியிடுகின்ற விடுதலைப் புலிகளின் இழப்புக்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் முக்கிய கவனம் செலுத்துகின்றன.  சர்வதேச ஊடகங்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்த மக்களையும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களையும் குழப்புகின்ற பாரிய திட்டங்களுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் பரப்புரை குறித்து தமிழ் மக்கள் விழிப்போடு சேயற்படுங்கள். ஒரு இன அழிவை மறைப்பதற்கு சிறிலங்கா மேற்கொண்டுள்ள பாரிய இந்த ஊடகப் போரை கவனமாக எதிர்கொள்ளுங்கள்
நன்றி : தமிழ்வின்

May 11, 2009

வாக்களியுங்கள் காங்கிரசுக்கு!

உங்கள் சகோதரரை கொல்லும்  
மனம் உள்ளதா உங்களுக்கு?  
உங்களின் சகோதரர்களின் குழந்தைகள்  
அனதைகள் ஆக விருப்பமா உங்களுக்கு? 
உங்கள் சகோதரிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை 
எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்வீர்களோ நீங்கள்?  
குண்டு விழுந்தும், உணவு இல்லாமலும் 
உறவினர்கள் சாக விருப்பமா உங்களுக்கு? 
உங்கள் குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்தி சித்ரவதை செய்யும் 
கொடியவனை கண்டு காணாமல் இருப்பீரோ நீங்கள்?  
தாக்குதல் நடத்த ஆயுதம் தருபவனுக்கு 
ஒட்டி உறவாடி ஆதரவு தருவீர்களா?  
இவற்றுக்கெல்லாம் உங்களின் பதில் ஆம் என்றால் 
கிரிக்கெட் பார்த்து சந்தோஷப்படுங்கள்
திரைப்படங்கள் மூலம் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்
இதோ தேர்தல் வந்து விட்டது கவலைப்படாமல் வாக்களியுங்கள்  
காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும்.

April 7, 2009

தமிழினத்துக்கு விழுந்த செருப்படி!

‘‘நான் செய்தது தவறில்லை.எனது செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். இது ஒரு எரியும் பிரச்னை. எங்கள் சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை’’. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது செருப்பை வீசி எரிந்துவிட்டு சென்ற சீக்கிய பத்திரிக்கையாளரின் குரல் இது.
இந்திரா படுகொலையை அடுத்து நடந்த சீக்கியர் படுகொலைக்கு காரணமானவராக குற்றம்சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லரை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து சி.பி.ஐ. நீக்கியது தொடர்பான கேள்விக்கு சரியாக பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த இவர் செய்தியாளர் சந்திப்பில், அவர் மீது செருப்பை வீசி தாக்கியுள்ளார்.
‘‘எனது அணுகுமுறை தவறாக இருந்திருக்கலாம். இதை எந்த பத்திரிக்கையாளரும் செய்யக்கூடாது. ஆனால், நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்’’ என தன் தரப்பு நியாயத்தை சொல்லி இன உணர்வை எடுத்து வைத்துள்ளார் அந்த செய்தியாளர்.
எனவே அவர் செருப்பை வீசியது சரியா? இந்த அணுகுமுறையை வரவேற்பதா என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு இந்த பதிவை படிப்பது நல்லது. அந்த கேள்விகள் பிரதானம் என்பவர்கள் தொடர்ந்து பதிவை படிக்க வேண்டாம்.
சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்பான சி.பி.ஐ. மீதான கோபத்தை அரசின் மீதும், அரசின் சார்பில் செயல்படும் உள்துறை அமைச்சர் மீதும் காட்டியுள்ளார் அந்த செய்தியாளர். சரியா, தவறா என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால், அது ஒரு இன உணர்வு.
ஆனால், இதைப்பற்றி எல்லாம் நாம் படிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. ஏனெனில் நமக்கு ஏது இன உணர்வு. நித்தம் நித்தம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், நமக்கு இன உணர்வு எட்டி கூட பார்க்காது.
தமிழர்களை கொல்ல ஆயுதங்களை வழங்கி விட்டு, அமைதிக்கு தூது போகிறோம் என்றும், ‘போர் நடக்கும் இடங்களில் அப்பாவி தமிழ் மக்கள் இறப்பது சாதாரணம்’ என்றும் நம்மை அடிமையாய் ஆளும் வர்க்கத்தினர் சொல்வதை அமைதியுடன் கேட்டு மீண்டும் அரியாசனையில் அமர வைப்பது தானே நம் பணி.
இப்போதைக்கு எம்.பி. சீட், ஜெயித்தால் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் கேபினட் அமைச்சர் பதவி. தமிழர் செத்தால் எனக்கென்ன என கணக்கு போட்டு வரும் கருணாநிதிக்கும், இலங்கை தமிழர்கள் உயிரை ..யிராக கூட மதிக்காத காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் இன்னும் நம்புகிறோமே நமக்கு ஏது இன உணர்வு.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பிய சிறுத்தை கட்சித் தலைவர் இப்போது ஆயுதம் வழங்கி கொல்லும் ‘கை’யுடன் கைகோர்த்துள்ளார். இலங்கை தமிழர்கள் எங்கள் சொந்தங்கள் என நீட்டி முழக்கி புரட்சி வார்த்தைகளில் புயல் போல் பேசியவர் இலங்கை தமிழர்கள் துச்சமென மதிக்கும் அன்னையுடன் கரம் கோர்த்து, தமிழர் படுகொலையா அப்படியென்றால்? என கேட்கத்துவங்கி விட்டார். இவர்கள் இருவரையும் விட அம்மாவுடன் நேரிடையாகவும், காங்கிரசுடன் மறைமுகமாகவும் கரம்கோர்த்துள்ளார் மருத்துவர். ஆனால் இதையெல்லாம் கண்ட பின்னும், கொலையாளிகளில் குறைந்த கொலை செய்தவர்களை தேடுவதை போல இவர்களில் ஒருவரையே தேடி வருகிறோமே நமக்கு ஏது இன உணர்வு. அங்கு தினமும் செத்து செத்து பிணமாகி வருபவர்கள் நம் இனத்தினர். தமிழர்கள். அதை எப்படி நாம் மறக்கிறோம். கொலை செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு போராடும் நிலையில், கொலையை தடுத்து நிறுத்த போராட தயங்குகிறோமே நமக்கு ஏது இன உணர்வு.
அரசுடன் எவ்வித தொடர்பும் இல்லாத சி.பி.ஐ. மீதான சீக்கியர்களின் கோபம், அரசின் மீதும், அரசு சார்பில் உள்துறை அமைச்சர் மீது செருப்பாய் எரியப்பட்டுள்ளது. இதே தமிழன் இன உணர்வு கொண்டால் . . . ஆனால், இந்த கேள்விகளுக்கு யோசிக்க வேண்டிய அவசியம் கூட நமக்கு ஏற்படாது. இன உணர்வு என ஒன்று நம்மிடம் இருக்கிறதா என்ன?
சீக்கிய பத்திரிக்கையாளரால் உள்துறை அமைச்சருக்கு விழுந்த செருப்படி, உண்மையில் தமிழனுக்கு விழுந்த செருப்படி. நான் ப.சிதம்பரத்தை கூறவில்லை. அவரை அப்படி கூற எனக்கென்ன பைத்தியமா பிடித்துள்ளது.

March 18, 2009

ஒரு எம்.பி. தொகுதிக்கு கொள்கையை அடமானம் வைத்த திருமா

‘‘சிங்கள அரசுக்கு எதிரான அறப்போராட்டத்தை வலுவிழக்க செய்யும் தமிழக அரசின் முயற்சி வேதனையை அளிக்கிறது. ஆதாரிக்காவிட்டாலும் தமிழக அரசு எதிர்த்திருக்க கூடாது’’
இது இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி நடந்த போராட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பகுதி. இது மட்டுமன்றி, இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தொடர்ந்து கண்டன குரல்களை பதிவு செய்து வந்தவர் தொல்.திருமாவளவன். ஆனால், இப்போது நிலை தலைகீழ். இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பான போராட்டங்களில் அண்மைகாலமாக தொல்.திருமாவளவன் பங்கேற்கவில்லை. அது தொடர்பான அறிக்கைகளும், பேச்சுகளும் இல்லை. அதேசூழலில் தான் பகிரங்கமாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
இலங்கை தமிழர், விடுதலை புலிகள் ஆதரவு நிலைக்காக விடுதலை சிறுத்தைகளுடன் காங்கிரஸ் கட்சி, கூட்டு வைக்க கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தலைமைக்கு பகிரங்கமாக வேண்டுகோள்
விடுத்தனர். இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தெரியும்.
‘ஒட்டுமொத்த தமிழர்களை காங்கிரஸ் ஆட்சி இழிவு படுத்துகிறது. தமிழர்கள் ஒரு போதும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை மன்னிக்கமாட்டார்கள்’ என கடுமையாக விமர்சித்தார் தொல்.திருமாவளவன். இது காங்கிரசாருக்கும் தெரியும். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் கூட்டணி கரம் கோர்த்துள்ளது இவ்விரு கட்சிகளும். இப்போது காங்கிரஸ் கட்சி பற்றிய விமர்சனத்தை தொல்.திருமாவளவனும், விடுதலைசிறுத்தைகள் கட்சி குறித்த கண்டனங்களை தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தெரிவிப்பதில்லை.
இன்றும் ஆயிரமாயிரம் தமிழர்கள் இலங்கையில் செத்துக்கொண்டிருக்க கூட்டணி இட ஒதுக்கீட்டை துவங்கியுள்ளது தி.மு.க. கூட்டணி கட்சிகள். அநேகமாக காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தில் போட்டியிடக்கூடும். ஆனால், இந்த ஒரு மக்களவை தொகுதியின் மூலம் கட்சியின் கொள்கைகளை இவர் முன்னிறுத்த முடியாது. ஏனெனில் கட்சியின் கொள்கைகளை அடமானம் வைத்து தான் இந்த மக்களவை தொகுதியே பெறப்பட்டுள்ளது.
அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என நீளும் கட்சியின் முழக்கங்கள். அனேகமாக இனி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பயன்படாது. மக்களவை தேர்தலில் பெறப்பட உள்ள ஒரு சீட்டுக்காக கொள்கைகளுடன் இந்த வாசகங்களையும் அடகு வைத்து விடுங்கள்.
விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம், போராட்டங்களின் போது இளிச்சவாயர்கள் நாங்கள் அல்ல என கோஷம் இடம்பெறும். உண்மை தான் உங்களை நம்பிய தமிழர்களும், இலங்கை தமிழர்களும் தான் இளிச்சவாயர்கள்.

March 16, 2009

என்ன ஆனது இலங்கை பிரச்னை?

ர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம், பந்த், கடையடைப்பு, மனித சங்கிலி என தமிழகத்தில் கடந்த இரு மாதங்கள் போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் எதிரொலித்தது இலங்கை தமிழர் பிரச்னை. முத்துக்குமாரில் துவங்கி நடந்த பல தீக்குளிப்பு சம்பவங்கள், இலங்கை தமிழர் பிரச்னையை விஸ்வரூபமாக்கியது.
இந்த போராட்டங்களெல்லாம் நடந்த போது, இலங்கையில் நாளன்றுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வந்தனர். இன்று தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்கள் பன்மடங்கு குறைந்துள்ளது. ஆனால், இலங்கையில் இன்றும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ம.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், பாரதீய ஜனதா, விடுதலை சிறுத்தைகள், தமிழர் பாதுகாப்பு இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒரு புறம். தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் ஒருபுறம் என திரும்பிய திசையெங்கும் இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தி விதவிதமான போராட்டங்கள் நடந்தன.
ஆனால், இப்போது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருந்த கட்சிகள் திசைமாறி போயுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க போராட்டங்களில் தி.மு.க., காங்கிரசை விமர்சிக்க வேண்டியது தவிர்க்க இயலாத சூழல் உள்ள நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி வகிக்கும் விடுதலை சிறுத்தைகளும், தி.மு.க.கூட்டணியில் இடம்பெறக்கூடும் என்பதால் பா.ம.க.வும் இப்போது போராட்ட நடவடிக்கைகளில் இருந்து வெளியேறியுள்ளன.
இதேபோல், சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் திரைப்படத்துறையினரும், கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் பெரியார் திராவிடர் கழகத்தினரும், நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் ம.தி.மு.க.வினரும் போராட்ட நடவடிக்கைகளில் மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இவர்களின் கோரிக்கை இலங்கை தமிழர் பிரச்னையை கண்டித்து அல்ல. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி.
அதேபோல், இலங்கை தமிழர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், போலீசாரை கண்டித்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டம், கல்லூரி மூடல் சம்பவத்தால் ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில், இப்போது இலங்கை தமிழர் பிரச்னையை கையில் எடுக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இனி இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கான போராட்டங்கள் இருக்காது. ஆனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு குரல்ஙகள் எழும். ஆனால், அவை இலங்கை தமிழர் நலனை காப்பதாக இருக்காது. மாறாக வாக்குகளை கவருவதற்காக இருக்கும்.
தேர்தல் தேதி அறிவிப்பு நம் இன உணர்ச்சியை அகற்றும் என்றால், நம் இன உணர்ச்சியை என்னவென்று சொல்வது?

March 13, 2009

கம்யூனிசம் பேசும் ‘காஞ்சிவரம்’

ம்யூனிசம் என்ன சாதித்தது? பல விவாதங்களின் போது என் நண்பர்கள் என்னிடம் வைத்த கேள்விகளில் ஒன்று. வரலாற்றை சொல்லி புரிய வைக்க முடியாது என்பதால், பெரும்பாலும் இந்த கேள்விக்கு என் பதில் மவுனமாகவே இருந்து வந்தது. இனி இந்த மவுனம் இருக்காது. அதற்கு மாறாக ‘காஞ்சிவரம் படத்தை பாருங்கள்’ என்பதாக இருக்கும்.

கம்யூனிசம் இல்லாவிடில் தொழிலாளர்கள் நிலை என்னவாகி இருக்கும்? எனும் மிகப்பெரிய கேள்விக்கு 1.30 மணி நேரம் நகரும் மன்னிக்கவும் நம்மை நகர்த்தும் இந்த படத்தில் அவ்வளவு அழகாக விளக்கியிருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். தனது தாய்க்கும், மனைவிக்கும் பட்டு சேலை வாங்கித்தர விரும்பி அதில் தோல்வியடைந்து, மகளின் திருமணத்துக்கு எப்படியாவது பட்டு சேலை வாங்கித்தந்தாக வேண்டும் என முடிவு செய்து, அதற்காக நெசவு செய்யும் இடத்தில் இருந்து பட்டு நூலை திருடி வந்து நெசவு செய்கிறார் பிரகாஷ்ராஜ். இதற்கிடையே நோய் பாதிப்புக்குள்ளாகும் பிரகாஷ்ராஜின் மனைவி இறக்கிறார். தொடர்ந்து மகளுக்காக பட்டு சேலை தயாரிப்பு பணியில் அவர் ஈடுபடுகிறார். இதற்கிடையே, ஊருக்கு தொழிலாளர்கள் நிலையை காண வரும் கம்யூனிசவாதி ஒருவரிடம், கம்யூனிச கொள்கைகளை கேட்கும் பிரகாஷ்ராஜ், அதில் ஆர்வமாக ஈடுபட துவங்குகிறார். கம்யூனிசம் தடை செய்யப்பட்டிருந்த அந்த காலத்திலும் மறைமுகமாக இயக்கத்தை நடத்தி, நெசவாளர்களின் கோரிக்கைகளை முன்வைக்கிறார் பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது தோழர்கள். இதற்காக வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்துகிறார்.

இதனிடையே மகளின் திருமண தேதி நெருங்குகிறது. திருமணத்துக்குள் பட்டு சேலை தயார் செய்ய வேண்டும் என்பதால், போராட்டத்தை தன்னிச்சையாக கைவிடுகிறார் பிரகாஷ்ராஜ். தொழிலாளர்கள் பெரும்பகுதியினர் பிரகாஷ்ராஜூடன் பணிக்கு திரும்புகின்றனர். மீண்டும் பணிக்கு சென்று பட்டுநூலை திருடி சேலையை செய்ய துவங்குகிறார். ஆனால், அடுத்த முறை பட்டு நூலை திருடும்போது கையும் களவுமாக சிக்குகிறார் பிரகாஷ்ராஜ். இதன் பின்னர் சிறைக்கு செல்கிறார். இதனிடையே கிணற்றில் விழுந்து கிடை பிணமாகிறார் பிரகாஷ்ராஜின் மகள். அவரை பார்க்க 2 நாட்கள் சிறைக்காவலில் செல்லும் பிரகாஷ்ராஜ், மகளை கவனிக்க யாரும் இல்லாததால் அவருக்கு விஷம் கொடுத்து கொல்கிறார். அதுவரை தான் நெய்த பட்டு சேலையால் மகளின் உடலை மூட, ஏழை நெசவாளியின் நிறைவேறாத விருப்பத்துடன் முடிகிறது திரைப்படம்.

கம்யூனிசம் நம் நாட்டில் ஏற்படுவதற்கு முன்னர் தொழிலாளர்கள் பட்ட வேதனையை தத்ரூபமாக விளக்குகிறது படத்தின் முதல் பாதி காட்சிகள். அதற்கு மிக அழகாக பொருந்தியுள்ளது கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை சூழல். தனது முதலாளியின் மகளுக்கு பட்டு சேலையை நெயவு செய்து தந்து விட்டு, அதனை பார்க்க தனது மனைவியுடன் ஓடிச்சென்று மறைந்திருந்து பார்ப்பது; பட்டு குறைந்ததால் காட்டு மிராண்டித்தனமாக நெசவாளி ஒருவர் தாக்கப்படுவது; வீட்டில் தொழில் செய்ய அனுமதி மறுத்து அனைவரையும் ஒரே இடத்தில் தொழில் செய்ய கட்டாயப்படுத்துவது என கம்யூனிசம் தோன்றுவதற்கு முன்னர் இருந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை விவரித்து விரிகிறது முதல்பாதி காட்சிகள். கம்யூனிசவாதி நாடகம் மூலம் தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்க்க தூண்டும் காட்சிகள் அழகு.

பட்டு சேலை நெசவு செய்வதில் மிகச்சிறந்த கைத்தறி நெசவாளியாக பிரகாஷ்ராஜ். தாய், மனைவி, மகள் என மூவருக்கும் பட்டுசேலை வாங்கித்தர விரும்பி தோற்கும் நெசவாளியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். பிரகாஷ்ராஜின் மனைவியாக ஷ்ரேயா. மிக அழகான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். பிரகாஷ்ராஜின் மகள், நண்பர் என அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். தனது மனைவி இறப்பதற்கு முன்னால், தனது மகளுக்காக தயார் செய்யப்பட்டு வரும் பட்டு சேலையை மனைவிக்கு பிரகாஷ்ராஜ் காட்டுவதும், அதனை கண்டு புன்னகைத்தவாறு இறப்பதும் மனதை தைக்கிறது. அதேபோன்று இறுதி காட்சியில் மகளை தூக்கி கொண்டு தயார் செய்து முடிக்கப்படாத பட்டுசேலையை காட்டும் போது மனது மேலும் இறுகுகிறது.

இறுதி காட்சியில நெயவு செய்த வரை சேலையை கிழித்துக்கொண்டு வந்து மகளின் சடலத்துக்கு பிரகாஷ்ராஜ் போர்த்துவதும், அது போதாமல் இருப்பதும்; நெசவாளர்கள் தற்கொலை காட்சிகள் உள்ளிட்டவை நெசவாளர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள். கம்யூனிச பாதையில் செல்லும் பிரகாஷ்ராஜ், சுயநலத்தால் திடீரென பாதைமாறுவதால் ஏற்படும் பிரச்னைகளும், அதன் மீதான வசனங்களும் நெகிழவைக்கின்றன. வசனங்களில் நெசவாளர்களின் அழகிய வாழ்வியலும், சோகமும் வெளிப்படுகின்றன. மிக குறைந்த நேரமே என்னை பயணிக்க வைத்த போதும், என்னை நீண்ட தூரத்துக்கு அழைத்து சென்றது காஞ்சிவரம். பொறுக்கி, போக்கிரி, திமிரு என தமிழ் பெயர்களில் படம் எடுத்து, தமிழை வாழ வைக்கும் இயக்குனர்களின் கவனத்துக்கு ... காஞ்சிவரத்தை பாருங்க.

March 9, 2009

நாஞ்சில் சம்பத் மீது தே.பா. சட்டம்

நாட்டின் பாதுகாப்புக்கான சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டத்தை, ஆட்சி பாதுகாப்பு சட்டமாக மாற்றியுள்ளது தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும்.
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், யாருடைய பிரசாரம் கட்சிக்கு பாதகமாக அமையும் என நினைக்கிறார்களோ, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்கிறது தி.மு.க. சீமான், கொளத்தூர் மணி என நீளும் இந்த பட்டியலில் அடுத்து இடம்பெறுகிறார் நாஞ்சில் சம்பத்.
பிரசாரத்தில் தி.மு.க. காங்கிரஸ் எதிர்ப்பை அனலாய் கக்குபவர்களில் முக்கிய இடம் பிடிப்பவர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க.வின் பிரசார பீரங்கி இவர் தான். இவரின் பிரசாரம் கண்டிப்பாக தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும். இதனை உளவுத்துறை அரசுக்கு தெரிவிக்க திருப்பூரில் ஒரு வாரத்துக்கு முன்னதாக நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவரை கைது செய்துள்ளது போலீஸ்.
இதன் தொடர்ச்சியாக இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவுகிறது போலீஸ். அதன்படி, தமிழகம் முழுவதும் இதுவரை நாஞ்சில் சம்பத் மீது பதிவாகியுள்ள வழக்குகளை திருப்பூர் போலீசார் சேகரித்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்த முழுவிவரங்களை சேகரித்துள்ள திருப்பூர் போலீசார், நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதி கோரியுள்ளனர். இன்று (மார்ச் 10) அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார் என உறுதியாக கூறுகின்றன போலீஸ் வட்டாரங்கள்.
சீமான், கொளத்தூர் மணி இப்போது நாஞ்சில் சம்பத் என நீளும் இந்த பட்டியலில் அடுத்து யாராக இருக்கும். வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன், இயக்குனர் மணிவண்ணன் . . . ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம். போலீசாருக்கு ஒரே ஒரு கோரிக்கை, தேசிய பாதுகாப்பு சட்டம் அப்படியே இருந்து விட்டு போகட்டும். தயது செய்து பேரை மட்டும் மாற்றுங்கள், ‘ஆட்சி பாதுகாப்பு சட்டம்’ என்று. . .

February 21, 2009

தேர்தலே ஆயுதமாக . . .

‘என்னை கைது செய்வார்கள், என் எண்ணத்தை என்ன செய்வார்கள். நான் பிரபாகரனின் தம்பி, ஓடி ஒளிய மாட்டேன்’. 3வது முறையாக இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நேற்று கைது செய்யப்பட்ட சீமானின் முழக்கம் இது.
இந்தியா இறையாண்மைக்கு பேசியதாக மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளார் இயக்குனர் சீமான். இந்திய இறையாண்மைக்கு எதிராக என அரசால் கூறப்படுவது, தமிழ் ஈழத்தை ஆதரிப்பது. தற்போது தனி ஈழ கோஷத்தை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்திராகாந்தி, அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் கனவு தனி ஈழம். கட்சியின் பிரதான தலைவர்களின் கனவை முழங்கும் ஒருவரை, கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வும், காங்கிரசும் துடிப்பதும், அதனை அவசர அவசரமாக தி.மு.க. அரசு செய்து முடிப்பதும் எப்படி விமர்சிப்பது என கூற முடியவில்லை.
இலங்கையில் ஆயிரமாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை தமிழர் பிரச்னையில் நாங்கள் தலையிட முடியாது என கூறிய பிரணாப் முகர்ஜியை கண்டிக்காத காங்கிரசும், அ.தி.மு.க.வும், தனி ஈழம் கோரிய ஒருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துவதும், அதற்கு கெடு கொடுத்து நாங்கள் கைது செய்வோம் என கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. சீமான் கைது என்பது வெறும் சம்பவமாக இருக்க கூடாது. முத்துக்குமாரின் வீர மரணம் முதல் சீமான் உள்ளிட்டோர் கைது சம்பவம் வரை இன்னும் ஓரிரு மாதங்களில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். எங்கள் தமிழினத்தை காக்க வராத யாருக்கும் நாங்கள் வாக்கிடமாட்டோம் என புறக்கணிக்க வேண்டும். எங்கள் இனத்தினரின் உயிரை விட எங்களுக்கு வேறேதும் பெரிதல்ல என்பதை நாம் உணர்த்த வேண்டும்.
ஓரினம் அங்கு முழுமையாக கொல்லப்பட்டு வருவதை கண்டு இனியும் நாம் பொறுத்திருக்க முடியாது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என போராட்டங்களை தொடர்வோம். இந்த போராட்டத்துக்கெல்லாம் இறுதி வடிவமாக நாம் தேர்தலை பயன்படுத்துவோம். நம் தமிழின விடிவுக்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தேர்தல் தான் என்பதை மறந்து விடாதீர்கள். பாடம் கற்பிக்கும் நேரம் நெருங்குகிறது.

February 19, 2009

திசை மாற்றப்படும் இலங்கை பிரச்னை?

இலங்கை தமிழர் பிரச்னைக்காக போராடி வரும் சமூகத்தினரில், மாணவர்களுக்கு அடுத்தபடியாக தீவிரமாக இருந்து வருவது வக்கீல்கள். இந்த தீவிரம் தான் சுப்பிரமணியசுவாமி மீது தாக்குதலை ஏற்படுத்தவும் வித்திட்டது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க கல்லூரிகளையும், விடுதிகளையும் மூடிய தமிழக அரசு, வக்கீல்கள் போராட்டத்தை என்ன செய்வது என தெரியாமல் விழித்து வந்தது. இந்த நிலையில் தான் சுப்பிரமணியசுவாமி மீதான தாக்குதல் அரங்கேறியது. இந்நிலையில், இலங்கை தமிழர் ஆதரவு நிலையில் இருந்த வக்கீல்கள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தி, வக்கீல்களை அரசுக்கு எதிரானவர்களாகவும், காவல்துறைக்கு எதிரானவர்களாகவும் காட்டியுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் வக்கீல்கள் இலங்கை பிரச்னைக்கு ஆதரவு என்ற செய்தி வெளிவராது. இலங்கை பிரச்னை மறந்து, காவல்துறையை கண்டித்தும், அரசை கண்டித்தும் பிரசாரங்களை நடத்த கூடும் என அரசு நினைத்திருக்க கூடும். குறிப்பிடும்படி, இலங்கை தமிழர் பிரச்னையில் குரல் எழுப்பிய வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் தொலைக்காட்சி, தமிழோசை போன்ற இலங்கை தமிழர் ஆதரவு ஊடகங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தாக்கப்பட்டுள்ளனர். சுப்பிரமணியசுவாமி நீதிமன்றத்தில் ஆஜரானதும், வக்கீல்கள் நீதிமன்றத்தில் தாக்கப்பட்டதற்கும் என்ன தொடர்பு, சுப்பிரமணியசுவாமியை இரு தினங்களுக்கு முன்னர் தாக்கியதற்கா இந்த தடியடி போராட்டம். நீதிமன்ற வளாகத்தில் போலீசார் எழுப்பியுள்ள இந்த தடியடி சம்பவம், இலங்கை தமிழர் பிரச்னையை திசை திருப்பத்தானா? இனத்தை அழிக்கும் கும்பலுக்கு இணங்கி போகும் அரசிடம் இதை விட வேறென்ன எதிர்பார்க்க முடியும்.