July 28, 2009

கோவை சாதி கட்சியினருக்கு . . .

‘‘ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற்கென்றும், மற்ற பலர் வேதனைபடுவதற்கென்றுமே அமைக்கப்பட்ட சாதிமுறைகள், இந்நாட்டை விட்டு அகலும் வரை நமக்குள்ள கொடுமைகள் நீங்காதென்பது திண்ணம்’’. சாதி வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்த புரட்சிகாரர் ‘தந்தை பெரியார்’ உதிர்த்த சொற்கள் இவை.
சாதியின் பெயரால் மிருகங்களாக நாம் மாறி வருவதை உணர்த்த இவ்வார்த்தைகளை பிரயோகித்தார் பெரியார். ஆனால், இப்போது சாதியின் பெயரால் முளைத்து மனிதர்களை மிருகங்களாக்கும் முயற்சியை செவ்வனே செய்து வருகின்றன சாதி கட்சிகள்.
இந்த பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது கோவை மண்டலத்தை நம் இனத்துக்கான மண்டலம் என கூறிக்கொள்ளும் சாதி கட்சி ஒன்று. தாங்கள் சார்ந்த சாதியின் பெயரால் பேரவை என்ற பெயரில் பலரை வேதனைக்குள்ளாக்கும் வகையில், சாதி வெறியை பரப்பி வந்த அமைப்பு ஒன்று, மற்றவர்கள் வேதனைக்குள்ளாவதோடு தாமும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் அதனை அரசியல் கட்சியாக மாற்றிக்கொண்டது.
ஒரு தேர்தலை சந்தித்து, அவர்களை சார்ந்த இனத்தினரிடம் சாதி வெறியை பரப்பிய அக்கட்சியின் அடுத்த கட்ட இலக்கு, தமிழகத்தையே திக்குமுக்காட வைத்துள்ளது. கோவை மண்டல பகுதிகளை தனிமாநிலமாக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. நாட்டின் நாளைய தூண்களான மாணவர்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது இந்த கோரிக்கை.
‘‘நான் முதல் அமைச்சராக வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து கொங்கு நாடு தனி மாநிலமாக என்று பிரிகிறதோ அன்று தான் முதல் அமைச்சராவேன்,’’ என்ற பேச்சில் துவக்கி பிரிவினை கொள்கையை விதைத்துள்ளார் அக்கட்சியின் தலைவர்.
‘கொங்கு நாடு’ என்று இவர்கள் கூறுவது இவர்கள் இனத்தினர் மட்டும் வாழும் பகுதி அல்ல. பல்வேறு இனத்தினரும் ஒன்றாக இணைந்து வாழும் பகுதி. இவர்கள் இனத்தினர் சற்று கூடுதலாக உள்ளனர். அவ்வளவு தான். அப்படியிருக்க இவர்கள் வலியுறுத்துவது இந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் எப்படி பயன்படும்.
‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்; கொத்தடிமைக்கு எதிரான சட்டம் வேண்டாம்’ என கட்சிக் கூட்டங்கள் தோறும், ஒடுக்கப்பட்ட இனத்துக்கெதிரான சாட்டையை சுழற்றி உங்களால் அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கிட்டும்.
தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட காரணத்தினால் நீலகிரியில் போட்டியிட மறுத்து, செய்தியாளர்களின் தொடர் கேள்விகளால், வேறு வழியின்றி கடைசி நேரத்தில் ஏதோ ஒரு வேட்பாளரை அறிவித்து, அந்த வேட்பாளருக்கு உரிய மரியாதை அளிக்காமல் புறக்கணித்த நீங்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்களை எப்படி மரியாதையுடன் நடத்துவீர்.
கொங்கு ................ என சாதி பெயரை நீட்டி முழங்கி பேசும் உங்களால், மற்ற சாதி வேறுபாடு பாராமல் எப்படி பணியாற்ற முடியும்.
சாயப்பட்டறைக்கு தீர்வு; கள் இறக்க அனுமதி என உங்கள் இனத்தினரின் பிரச்னைகளை வலியுறுத்தும் நீங்கள், துப்புரவு தொழிலாளிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட இனத்துக்கான ஒரே ஒரு கோரிக்கையை கூட இதுவரை முன்னிறுத்தாதது ஏன்.
தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறை அதிகம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது உங்கள் கொங்கு நாடு. இதற்கு எதிராக குரல் கொடுப்பீரா நீங்கள்.
‘தமிழ்நாட்டில் சேர்ந்து இருக்கும் வரை கொங்கு நாடு முன்னேறாது’. உங்கள் தலைவர் உதிர்த்த வார்த்தைகள் இவை. தமிழகத்தில் இருக்கும்வரை அல்ல. உங்கள் கட்சி இருக்கும் வரை என மாற்றிக்கொள்ளுங்கள். ‘நம்முடன் ஒப்பிடுகையில் மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு. மிருகங்களுக்கு ஒரு அறிவில்லாததின் பயன் சாதி இல்லை. நமக்குள்ள இழிவு சாதியால் தான்’ என்றார் தந்தை பெரியார். கொங்கு நாடு என அழைக்கும் பகுதிக்கான இழிவு உங்களால். உங்கள் சாதியால்.

8 comments:

Anonymous said...

1 lakh people voted to them Erode where Periyar born....

If DMK or ADMK not selecting candidates then you can ask these questions.....

The same periyar (so called) followers (DK) are supporting (DMK/ADMK) the same selection method....

I can see you as F**L who is shouting

Anonymous said...

KNMK Rules...We got 6 lakhs votes..

that too short period of time....

புரட்சிகர தமிழ்தேசியன் said...

அய்யா! நாங்களும் வட தமிழ்நாட்டை பிரித்து வன்னிய மாநிலம் அமைக்க இருக்கிறோம்.. தலித் மாநிலம்.. தேவர் மாநிலம் அமைக்க யாராவது இருக்கிறார்களா? அது சரி கொங்கு மாநில முதல்வர் கன்னட தேவ கவுடாவா?? ஏன் எனில் எற்கெனவே அவரை அழைத்து விழா எடுத்தவர்கள்????

Anonymous said...

முதல் ல உன்னோட சாதிக்கு இருக்கற சங்கத்துக்கு போய் அவங்களை கலைக்க சொல்லு. உனக்கு செருப்படி நிச்சயம்டா.ஏன்டா ப்ளோக் சும்மா கேடைக்குதுனா என்ன வேணா எழுதுவியா ?இப்ப பா.ம.க வைப்பத்தி எழுதுவியாடா? இரட்டை டம்ளர் வெச்சுருக்கிற கடைக்காரனைப் போய் கேளுடா.நாங்க பண்ற தொழில் ல வேற சாதிக்காரங்களுக்கு வேலையே தருவதில்லையா ? கண்ட கண்ட நாய்களுக்கு எல்லாம் கவுண்டனைப்பதி சொல்றதுக்கு என்னடா தகுதி இருக்கு ?நீ என்ன சாதிடா அதை சொல்லுடா ஏதோ எங்க சாதினால கொங்கு நாட்டுக்கே இழிவுனு எழுதற.முடிஞ்சா தைரியம் இருந்த உன்னோட சாதிய பகிரங்கமா சொல்லுடா.எந்த கட்சி காரனடா சாதி பாக்காம வேட்பாளர் நிறுத்தறானுக.தலித்துக மட்டும் சாதி சங்கம் வெச்சு வன்கொடுமை சட்டத்துல பொய் வழக்கு போட்டு காசு புடுங்கரானுகளே அதப் போய் கேளு அப்பறம் நீயும் உள்ள தான் அததெரிஞ்சுக்க

ச.ஜெ.ரவி said...

வருகைக்கு நன்றி பெயரிலி.
எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவாகத் தான் உள்ளது.
சாதிக்கு பரிந்துரைத்து நீட்டி முழக்கியுள்ளீர்கள்.
‘பெரியார் பிறந்த ஈரோட்டில் 1 லட்சம் ஓட்டு வாங்கியுள்ளீர்கள்’
இல்லை என்பது என் வாதம் அல்ல. அனைவரும் சமம் என்ற விதையை விதைக்க பல ஆண்டுகளை எடுத்துக்கொண்டார் பெரியார். உங்கள் கட்சி சாதி வெறியை வேகமாக பரப்பிவிட்டது என்பது தான் என் குற்றச்சாட்டு.

ச.ஜெ.ரவி said...

வணக்கம் பெயரிலி.
‘‘குறைந்த காலத்தில் 6 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளீர்கள்’ என கூறுகிறீர்கள்.
யார் இல்லை என சொன்னது. பேரவை மூலம் பல வருடம் சாதி வெறியை பாய்ச்சி, கட்சி மூலம் அறுவடை செய்துள்ளீர்கள். அப்புறம் இன்னொரு விஷயம் நீங்கள் கொங்கு நாடு எனக்கூறும் பகுதிகளில் குறைந்த பட்சம் ஒரு கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் உள்ளார்கள். நீங்கள் வாங்கிய வாக்கு வெறும் 6 சதவீதத்துக்கும் குறைவு தான்.

ச.ஜெ.ரவி said...

வணக்கம் பெயரிலி அவர்களே.
சாதியை இல்லை எனும் எங்களுக்கு சாதி சங்கங்கள் இருக்க வாய்ப்பில்லை. அதெல்லாம் உங்களுக்கு புரியாது. சாதியை சுவாசித்து உயிர்வாழும் உங்களிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது.

நீங்கள் செய்யும் தொழிலில் வேறு சாதியினருக்கு வேலை தருவதில்லையா? என்கிறீர்கள்.
யார் இல்லை என்றது. வேலை தருகிறீர்கள். அவர்களை கொத்தடிமையாக நடத்துகிறீர்கள் என்பதல்லவா குற்றச்சாட்டு.

சாதி பெயரை கூறி வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பெயரை கூட தெரிவிக்காமல் பெயரிலியாக விமர்சிக்கும் நீங்கள், என் தைரியத்தை பற்றி எந்த சந்தேகமும் கொள்ள தேவையில்லை.

senthil said...

நீயும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு சாதியை சார்ந்தவனாகத் தான் இருக்க முடியும்.தன்னளவில் சாதி மறுப்பு என்று புரட்சி வாதம் பேசினாலும் எந்த அரசு பணிகளுக்கும் சாதி சான்றிதல் இல்லாமல் சேர முடியாது என்பது திண்ணம்.ஏன் எந்த பள்ளியிலும் சேரவும் முடியாது தான்.சாதி சங்கம் இருக்கிறது என்பதற்காக ஒட்டு மொத்தமாக அந்த சாதியை சேர்ந்தவங்களையே இழிவானவர்கள் என்று சொல்வதும் ஒரு வகையான தீண்டாமை தான்.நாங்கள் கொத்தடிமையாக நடத்துகிறோம் என்றால் ஏன் வேலைக்கு வர வேண்டும் ? நாங்கள் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை.முடிந்தால் உனது குடும்பத்தையும் உனது சாதிக்காரர்களையும் உட்பிரிவுகள் இல்லாது ஒழிக்கப் பாடு படுங்கள் பின்னர் அவர்கள் யார் யாரைத் திருமணம் செய்வது என்று கேள்வி கேட்பார்கள்?அதற்கும் பதில் தேடி சொல்லவும்.பின்பு மற்ற சாதிக் காரர்களைப் பற்றி திட்டி பதிவெழுதி பேர் வாங்கலாம்.சாதி இல்லை என்று சொல்பவர்களுக்கு சாதி சங்கம் இல்லை என்பது எனக்கு புரியாத ஒன்றல்ல.எப்படியும் அமைப்போடுஒரு வகையில் சமரசம் செய்து கொண்டு தான் வாழ்கிறாய் என்பதும் எங்களுக்குத் தெரியும்.