‘எனக்கு பின்னால் வருபவர்கள் என்னைப்போல் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்’ தந்தை பெரியாரின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது ‘உன்னைப்போல் ஒருவன்’. தீவிரவாதத்தை எதிர்க்க தீவிரவாதமே தீர்வு என பொட்டில் அறைந்து கதை சொல்கிறது படம்.
தீவிரவாதத்துக்கு எதிராக கிளம்பும் சாமானியன் தான் கதையின் நாயகன். அரசு பேருந்து, வணிக வளாகம், ரயில், காவல் நிலையம் என அடுத்தடுத்து பல இடங்களில் பேக் ஒன்றை வைத்து விட்டு, கட்டுமான பணி நடந்து கொண்டுள்ள கட்டடத்தின் மேலே செல்கிறார் கதையின் நாயகன். லேப்டாப், செல்போன் என அதிநவீன சாதனங்களுடன், சென்னை மாநகர காவல்துறை ஆணையரை தொடர்பு கொள்ளும் நாயகன், மாநகரில் 5 இடங்களில் சக்தி மிக்க வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டுகிறார். வெடிக்காமல் இருக்க வேண்டுமானால், குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கிறார். வேறு வழியின்றி காவல்துறையால் விடுவிக்கப்படும் தீவிரவாதிகளை சாதூர்யமாக கொல்கிறார் நாயகன்.
கதையின் நாயகனாக கமலஹாசன். காட்சிக்கு காட்சி மிக சிறந்த நடிப்பால் ஈர்க்கிறார். புகார் அளிக்க செல்லுமிடத்தில் காவல் அதிகாரியிடம் பேசும் போதும், பெண் கருவறுக்கப்பட்ட காட்சியை போனில் விவரிக்கும் போதும், நீ எந்த மதத்தை சேர்ந்தவன் என கேட்கும் போது கோபப்படும் இடத்திலும் என காட்சிக்கு காட்சி பன்முக நடிப்பால் கவர்கிறார் கமலஹாசன்.
இவருக்கு இணையாக நடித்துள்ளார் மோகன்லால். மாநகர காவல்துறை ஆணையாளராக வரும் மோகன்லால். கமலஹாசனுடனான் உரையாடலின் போதும், தலைமை செயலாளர் லட்சுமியுடன் இது தொடர்பாக விவாதிக்கும் போதும் என படம் முழுவதும் நிஜ காவல்துறை அதிகாரியாக கண்முன் நிற்கிறார்.
படத்துக்கு மிகப்பெரிய பலம் வசனங்கள். படம் துவங்கி 10 நிமிடங்களுக்கு பிறகு வரும் ‘உன் மேல என்ன கோபம். கோபப்பட மொத்த நாடே இருக்கு’ என்ற வசனத்தில் துவங்குகிறது படத்தின் விறுவிறுப்பு. தொடர்ந்து படம் முழுவதும் வசனங்களின் ஆக்கிரமிப்பு தான். ஒவ்வொரு வசனங்களும், மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
‘அதென்ன நான் இந்துவோ, முஸ்லீமாவோ தான் இருக்கணுமா, கிறிஸ்துவனா, கம்யூனிஸ்டா, நாத்திகனா இருக்க கூடாதா’ என்பதில் துவங்கி அடுத்தடுத்து வரும் வசனங்கள் மத வெறியை கடுமையாக சாடுகிறது.
‘சொல்றதை தமிழ்ல சொல்லு, முதல்வர் டி.வி. பாத்துட்டு இருக்கார்’ என பேட்டி கொடுக்கும் அதிகாரியிடம் கமிஷனர் சொல்வது; ‘கீழே விழுந்துடுச்சுன்னு விட முடியலை. விலைவாசி ஏறிடுச்சுல்ல’ என கீழே கிடந்த தக்காளியை எடுக்கும் கதைநாயகன், ‘நாங்க கஷ்டப்பட்டு புடிச்சுட்டு வருவோம், தீவிரவாதியோ, அரசியல்வாதியோ ஒரு போன்ல விடுவிச்சுருவீங்க’ என கொந்தளிக்கும் கமிஷனர் என படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் நடைமுறையை அம்பலமாக்குகிறது.
படத்தின் முக்கிய காட்சி. தீவிரவாதிகளை கொல்வது ஏன் கமல் விவரிக்கும் காட்சிகள். கண்களை நீர் வழிய, பெண் ஒருவர் கருவழிக்கப்பட்ட காட்சியை விவரித்து விட்டு, கண்ணில் வழியும் கண்ணீரை துப்பாக்கியால் துடைக்கும் காட்சி படத்தின் மொத்த கதையையும் சொல்லி விடுகிறது. ‘தீவிரவாதத்தை அழிக்க தீவிரவாதம் தான் வழி’ என அடுத்து வரும் வசனம் அந்த காட்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது.
படத்தின் இசை, காவல்துறை அதிகாரிகளின் நடிப்பு அனைத்திலும் குறையேதும் இல்லை. உலக சினிமாக்களுக்கான தரத்தில் அமைந்துள்ள ‘உன்னைப்போல் ஒருவன்’ தமிழ் சினிமாவின் மைல் கல்.
14 comments:
நல்லவிமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது
நல்ல விமர்சனம். வசனங்களை நினைவில் வைத்து எழுதியது பாராட்டத்தக்கது.
நன்றி சுரேஷ்குமார், செந்தில்வேலன்
வசனங்கள் மிக மிக குறைந்த அளவு தான் எழுதியுள்ளேன்.
படத்தை கட்டாயம் பாருங்கள்
நல்லா இருக்குங்க உங்க விமர்சனம், எனக்கு அந்த துப்பாக்கியில் கண்ணீரை துடைக்கும் காட்சி மிகவும் பிடித்தது. ஆமா நீங்க திருப்பூரா? எங்கே ?
murli03@gmail.com
படத்தை விடவும் இந்த வரிகள் ஆழமாக உள்ளன. பயத்தைத்தருகின்றன. முதல் முறையாக படிக்கிறேன்..
//‘எனக்கு பின்னால் வருபவர்கள் என்னைப்போல் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்’ தந்தை பெரியார்.//
நன்றி முரளிகுமார் பத்மநாபன்
சொந்த ஊர் சத்தியமங்கலம். திருப்பூர்ல தான் இருக்கேன். பழைய பஸ் ஸ்டாண்டு கே.எஸ்.சி. அரசு பள்ளி அருகில்
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.
உன்னைப்போல் ஒருவன் அல்ல அவன்.!!! அவன் மோடியைப் போல் ஒருவன்.படத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல் இல்லாமல் நுனிப்புல் மேய்ந்து விட்டு எழுதி உள்ளீர்கள்.தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதம் தான் என்றால் சட்டம் நீதிமன்றம் எல்லாம் எதற்கு ? எல்லோரும் துப்பாக்கி உடன் தான் அலைய வேண்டுமா ?.கமலின் மீதுள்ள மயக்கத்தால் தான் இவ்வாறு எழுதி உள்ளீர்கள்.வெறும் காட்சி படிமங்கள் உருவாக்கும் பொய்மைகள் தான் அவை .ஹே ராம்,தசாவதாரம் என்று மென் இந்துத்துவ சார்பையும் வைணவ சார்பையும் வெளிப் படுத்திய கமல் இதில் பகிரங்கமாக இந்துத்துவத்துக்கு விளக்கு பிடித்துள்ளார்.கமல் கருப்பு சட்டைக்குள் ஒளிந்துள்ள ஒரு காவி பிரச்சாரகன்.
// senthilaan said...
உன்னைப்போல் ஒருவன் அல்ல அவன்.!!! அவன் மோடியைப் போல் ஒருவன்.படத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல் இல்லாமல் நுனிப்புல் மேய்ந்து விட்டு எழுதி உள்ளீர்கள்.தீவிரவாதத்துக்கு பதில் தீவிரவாதம் தான் என்றால் சட்டம் நீதிமன்றம் எல்லாம் எதற்கு ? எல்லோரும் துப்பாக்கி உடன் தான் அலைய வேண்டுமா ?.கமலின் மீதுள்ள மயக்கத்தால் தான் இவ்வாறு எழுதி உள்ளீர்கள்.வெறும் காட்சி படிமங்கள் உருவாக்கும் பொய்மைகள் தான் அவை .ஹே ராம்,தசாவதாரம் என்று மென் இந்துத்துவ சார்பையும் வைணவ சார்பையும் வெளிப் படுத்திய கமல் இதில் பகிரங்கமாக இந்துத்துவத்துக்கு விளக்கு பிடித்துள்ளார்.கமல் கருப்பு சட்டைக்குள் ஒளிந்துள்ள ஒரு காவி பிரச்சாரகன்.//
என்னதான் ஒருத்தன் குற்றம் செஞ்சாலும் .. எங்க வீட்டு பிள்ளை செய்யல என்று ...விமர்சனத்தை சாடும் செந்திலான் முழுமையான இஸ்லாமிய வாதி .என்ன மிஸ்டர் செந்திலான் குண்டு வெடிப்பு சம்பவம் பொய்யா ..? செத்தவன் எல்லாம் புள்ளபூச்சியா? வந்துட்டாங்கய்யா குல்லாவா மாட்டிக்கிட்ட்டு... நடுநிலை பேச தெரியலனா கம்முனு இருக்கணும் அத விட்டுட்டு கமலுக்கு மோடி பட்டம்.
இந்துத்வா மிருகங்களுக்கும் , உங்களைப்போன்ற இஸ்லாமிய வாத மிருகங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
எல்லாரும் ஒரு தரப்பு வாதம் பேசும் சிறுபிள்ளைகள் ..
கமல் என்ன சும்மா போற முசுலிம கொல்லனும்னா படம் எடுத்திருக்கான் .. பல நூறு பெற கொன்னவஙகிட்ட என்ன பேச்சு கெடக்குன்னு கேட்டிருக்கான்.. உயிரின் வலி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
இத சொன்னதுக்காக என்ன கமல் ரசிகன்னு விமரிசனம் போடாதப்பா...தப்பு செஞ்சா அவனையும் செருப்பால அடிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்பேன் ..
Vanakkam Thiru. Samanian.
Nan Idharku munnal ippadi oru bloggai kooda paarthathu illai. Neeggal seium savaikku enadhu nandrigal. Naan namakkal il pirandhu chennai l vaaalum samanian. Uggalai eppadi thodarbu kolvadhu.
Nandrigaludan,
Karthick.
அய்யா எதிர்க் கட்சியாரே
என்னோட பேர வெச்சே என்னோட மதம் என்னனு கண்டு பிடிக்கத் தெரியாத உங்களுக்கெல்லாம் பதில் சொல்லணும் நு என்னோட தலைவிதி.எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை கிடையாது.நான் ஏதோ குல்லாவா மாட்டிக்கிட்டு வந்துட்டேனாமா என்ன மடத்தனம் இது ?
தப்பு செய்யறவங்கள தண்டிக்க நீதி மன்றங்கள் சட்டம் எல்லாம் தேவையே இல்லையா ?.உலகில் இன்னும் ஜிஹாத் நடத்தும் ஒரே முட்டாள் தனமான மதமாக இஸ்லாம் விளங்குகிறது என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை பெரியாரிஸ்டுகள் சறுக்கும் இடமும் இதுவே.ஒரு பெரியார் இஸ்லாத்தில் சாத்தியமே இல்லை.இஸ்லாமில் அறிவியல் சிந்தனைகளுக்கு இடமில்லை .பெண்களையும் குழந்தைகளையும் ஆடு மாடுகளைப் போல் பங்கு போடுகிறார்கள்.ஆனால் அதற்காக கமல் சொல்லும் தீர்வு எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது என் கருத்து.ஏதோ எதிர்க்க வேண்டும் என்பதற்காக அறிவுக்கு பொருந்தாத வாதங்களை முன் வைக்காதீர்கள்
நீங்கள் எதிர்க் கட்சி அல்ல எதிரி கட்சி !!!
senthilaan said...
//என்ன மடத்தனம் இது ?
தப்பு செய்யறவங்கள தண்டிக்க நீதி மன்றங்கள் சட்டம் எல்லாம் தேவையே இல்லையா ?.///
நீதிமன்றமும் சட்டமும் நெறைய இருக்கு ,பயன்படுத்தப்படாமல் ,அதை சரி செய்வது எப்போ, கொஞ்சம் கோர்ட் வரைக்கும் வந்து பாருங்க ...
///ஆனால் அதற்காக கமல் சொல்லும் தீர்வு எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது என் கருத்து.ஏதோ எதிர்க்க வேண்டும் என்பதற்காக அறிவுக்கு பொருந்தாத வாதங்களை முன் வைக்காதீர்கள்
நீங்கள் எதிர்க் கட்சி அல்ல எதிரி கட்சி !!!////
//
வாங்க மிஸ்டர் செந்திலான் , குண்ட வெச்சு எத்தன பெற கொன்னாணுவ ,அவ்கனுகள் கொள்ளக்கூடாது..பரவால்ல நாலு பேரு சாக கூடாதுன்னு நீங்க நேனைக்கரதுல தப்பு இல்ல ..
ஆனா அதுக்காக அவனுகள வெளிய விட்டாலும் நூறு பெற கொள்ளுவாணுவ,உள்ள இருந்தா ஜெயிலரையும்,கைதிகளையும் மிரட்டி ஹை கிளாஸ் வாழ்க்கை வாழ்வாங்க ,இப்ப நீங்க சொன்ன மாதிரிதான் நடந்துருக்கு,அவனுக வெளீல வந்தாச்சு.
குண்டு வெச்சவன் எல்லாம் வெளிய வந்துட்டான் (மூணு பெற தவிர)
குண்டு வெடிப்புல செத்தவனுகளுக்கு உயிர் என்ன கிள்ளுக்கீரையா ?
உங்கள எதிர்ப்பதால எனக்கு என்ன ஆகப்போகுது.
சந்தன கடத்தல் வீரப்பன கொன்னப்ப பல பேருக்கு ஏற்பட்ட, சாதாரண பிரபலங்களின் மீதான பச்சாதாபம் தான் உங்களுக்கும் உருவாகியிருக்கிறது.
இந்த பணநாயகம் இன்னும் நூறு பேர கொன்னவன வி.ஐ.பி மாதிரி கவனிக்குது.
பணம் ,பயம்,மதப்பிரச்சினையாகிடுமோ இதெல்லாம் அரசியல்வாதிகள் பார்க்கலாம்.
நாம ஏன் பார்க்கணும்,உப்ப தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆவணும்..
ரொம்ப நன்றி, எதிரிக்கட்சி என உங்கள் அடைமொழிக்கு..
//என்னதான் ஒருத்தன் குற்றம் செஞ்சாலும் .. எங்க வீட்டு பிள்ளை செய்யல என்று ...விமர்சனத்தை சாடும் செந்திலான் முழுமையான இஸ்லாமிய வாதி .என்ன மிஸ்டர் செந்திலான் குண்டு வெடிப்பு சம்பவம் பொய்யா ..? செத்தவன் எல்லாம் புள்ளபூச்சியா? வந்துட்டாங்கய்யா குல்லாவா மாட்டிக்கிட்ட்டு... நடுநிலை பேச தெரியலனா கம்முனு இருக்கணும் அத விட்டுட்டு கமலுக்கு மோடி பட்டம்.//
இதே மாதிரி சில பத்து குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி சமீப காலங்களில் அம்பலப்பட்டுள்ளனர் இந்துத்துவ பயங்கரவாதிகள். அதை ஏன் கமல் படத்தில் சேர்க்கவில்லை?
Post a Comment