October 12, 2009

தாலி தேவையா?

‘சிவந்த மை பூசிய பெண்கள், வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்’. எனக்கு மிகவும் பிடித்த இத்தாலிய நாட்டு பழமொழி. சமீபத்தில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியை பார்க்கும் போது நான் மீண்டும் அசை போட்டது இந்த பழமொழியைத்தான்.
தாலி தேவையா, இல்லையா என சுமார் 1.30 மணி நேர விவாதத்தில் பெரும்பாலான நேரங்கள், ‘தாலி அணிந்தவர்கள், தாலி வேண்டும் என்பவர்கள் மட்டுமே குடும்ப பெண்கள்’ என்பது போன்ற கருத்து திணிக்கப்பட்டதை மறுக்க முடியாது. அதேசூழலில் அண்மைகாலமாக தாலி என்பது பெண்ணுக்கு தேவையா என்ற எதிர்ப்பு குரல் ஒலிப்பதையும் இந்த நிகழ்ச்சி பதிவு செய்தது.
‘தாலி என்பது ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணுக்கு தாலி என்றால், அப்ப ஆணுக்கு என்ன?’ என கேட்டது தாலி வேண்டாம் எனும் தரப்பு. ‘ஆணுக்கு வேணும்னா தாலி மாதிரி ஏதாவது போட்டுக்கலாம். பெண்ணுக்கு வேணாங்கறது சரியில்லை’ என்றது மற்றொரு தரப்பு. சினிமாக்களை போல, நிஜவாழ்வில் ‘தாலி’ என்பது கலாச்சார சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்று ஏராளமான சென்டிமெண்டுகளை நம் மக்கள் விதைத்து விட்டனர். அதுபோன்ற கலாச்சார பாதுகாவலர்களுக்கு சில கேள்விகள்.
01. பெண்களை திருமணம் ஆனவர், ஆகாதவர் என வித்தியாசப்படுத்தும் வகையில் தான் இந்த ‘தாலி’ உள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடும் கொடுக்காதது ஏன்? (தெருநாய்க்கும், வீட்டு நாய்க்கும் வித்தியாசப்படுத்தும் முயற்சியாக நாய்க்கு கட்டும் லைலென்சு போன்றது தான் இந்த தாலி என நான் நினைக்கிறேன்)
02. பெண்களுக்கு திருமணத்தின் போது தாலி, மெட்டி அணிவதை போல, ஆண்களின் கால்களிலும் வளையம் ஒன்று அணிவிக்கப்படும். ஆனால் திருமணமாகி சில தினங்களில் அது கழற்றிக்கொள்ளலாம். ஆனால், பெண் காலத்துக்கும் கழற்ற கூடாது. இது ஆணாதிக்க போக்கில்லை என நீங்கள் நம்புகிறீர்களா?

03. ‘தாலி என்பது பெண்களின் உயிர். கணவர் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம்’ என்கிறீர்கள். அது சரி. கணவன் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு என்ன அடையாளம்? தாலி இல்லாவிட்டால் உங்களால் கணவனுக்கு நம்பிக்கையுடன் இருக்க முடியாதா?

04. ஒரு பெண் தாலி அணிந்தால் தான், திருமணம் ஆனவளாக ஏற்றுக்கொள்வீர்களா? மனம் ஒத்துப்போன இடத்தில் பெண்ணுக்கு மட்டும் தாலி எனும் அடையாளக்குறி எதற்கு?
05. ‘மந்திரம் சொல்லி கட்டப்படும் தாலிக்கு எப்படி அர்த்தம் இல்லாமல் போய்விடுமா’ என கேட்கிறீர்கள். ‘தாலியில் குங்கும் வைத்து வழிபட்டால் கணவர் நீடூழி வாழ்வார்’ என்கிறீர்கள். ‘கணவர் நலனுக்கு சுமங்கலி பூஜை நடத்துகிறீர்கள்’ ‘இதெல்லாம் நம் கலாச்சாரம் என்கிறீர்கள்’. கணவர் மீது மனைவி அன்பை காட்ட இத்தனை நிகழ்வுகள், கணவருக்கு மனைவி மீது அன்பில்லையா? இல்லை இருக்க வேண்டிய அவசியம் இல்லையா?
திருமணம் என்பது ஒரு பந்தம். அன்பும், புரிதலும் தான் திருமண பந்தத்துக்கு தேவையான அடையாளங்கள். இவை இரண்டும் இருவருக்கும் தேவை. அதைவிடுத்து தாலியை பெண்ணுக்கு மட்டும் அணிவித்து விட்டு, அந்த முறையை உங்களை வைத்தே வளர்த்து வரும் ஆணாதிக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
‘சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்’. முகம் சிவக்க வெட்கப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலியும் அதுபோலத்தான்.

9 comments:

Robin said...

ஏன் பெண்கள் மட்டும் கஷ்டப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்? இது பெண்ணடிமைத்தனம் இல்லையா? ஏன் ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது?
இந்தக் கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ச.ஜெ.ரவி said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராபின்.

////////////////////////////
ஏன் பெண்கள் மட்டும் கஷ்டப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்? இது பெண்ணடிமைத்தனம் இல்லையா? ஏன் ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது?
இந்தக் கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
/////////////////////

குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணடிமைத்தனம் இல்லை. ஆனால், அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம், அவர்களை நாம் அடிமைப்படுத்துவது என்னமோ உண்மை. பெண் உயிரினங்கள் கர்ப்பம் தெரிப்பது மனிதத்தில் மட்டுமில்லை. எல்லா உயிரினங்களிலும் உள்ளது. ஆனால், தாலி கட்டுவது. மனிதர்களிலேயே பல பிரிவுகளில் இல்லை.

Robin said...

//அவர்களை நாம் அடிமைப்படுத்துவது என்னமோ உண்மை. // - நீங்கள் இன்னும் பழைய காலத்திலேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போதெல்லாம் ஆண்களை அடிமைபடுத்தும் பெண்கள்தான் அதிகம்.

வரதராஜலு .பூ said...

//Robin said...

//அவர்களை நாம் அடிமைப்படுத்துவது என்னமோ உண்மை. // - நீங்கள் இன்னும் பழைய காலத்திலேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போதெல்லாம் ஆண்களை அடிமைபடுத்தும் பெண்கள்தான் அதிகம்.//

நன்றாக சொன்னீர்கள் ராபின். இதுதான் உண்மை.

//குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணடிமைத்தனம் இல்லை. ஆனால், அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம், அவர்களை நாம் அடிமைப்படுத்துவது என்னமோ உண்மை.//

எது எதுலதான் பெண்ணடிமைத்தனத்தை கண்டுப்பிடிப்பீர்களோ?

எதிர்கட்சி..! said...

தாலி தேவையா? என்று கேட்கிறீர்களே இன்னமும் உங்கள் தாயோ அல்லது சகோதரிகளோ கட்டியிருக்கும் தாலியை அவிழ்த்து எரிந்து விட்டு, இதை சொல்லுங்கள் ,ஆண்கள் திருமணமானவர்கள் என்பதை அறிவிக்கும் வண்ணம் பண்டைய தமிழ் ஆண்கள் திருமணமான பின் மெட்டி அணிந்து கொண்டிருந்தனர். காலப்போக்கில் அது மாறி விட்டது.

//தெருநாய்க்கும், வீட்டு நாய்க்கும் வித்தியாசப்படுத்தும் முயற்சியாக நாய்க்கு கட்டும் லைலென்சு போன்றது தான் இந்த தாலி என நான் நினைக்கிறேன்) //

இந்த உவமையை இடம் தவறி சொல்லுகிறீர்கள்.யாராவது மொத்த பெண்களையும் நாய் என்கிறான் என்று சண்டைக்கு வரப்போகிறார்கள்...

//ஒரு பெண் தாலி அணிந்தால் தான், திருமணம் ஆனவளாக ஏற்றுக்கொள்வீர்களா? மனம் ஒத்துப்போன இடத்தில் பெண்ணுக்கு மட்டும் தாலி எனும் அடையாளக்குறி எதற்கு?
05. ‘மந்திரம் சொல்லி கட்டப்படும் தாலிக்கு எப்படி அர்த்தம் இல்லாமல் போய்விடுமா’ என கேட்கிறீர்கள். //
மந்திரம் சொல்லாமல் தமிழ்ப்பெரியவர்கள் எடுத்துக்கொடுக்கும் தாலியை கட்டி திருமணம் செய்கிறார்களே அதைப்பற்றி என்ன சொல்லுகிறீர்கள்.

//‘தாலியில் குங்கும் வைத்து வழிபட்டால் கணவர் நீடூழி வாழ்வார்’ என்கிறீர்கள். ‘கணவர் நலனுக்கு சுமங்கலி பூஜை நடத்துகிறீர்கள்’ ‘இதெல்லாம் நம் கலாச்சாரம் என்கிறீர்கள்’. கணவர் மீது மனைவி அன்பை காட்ட இத்தனை நிகழ்வுகள், கணவருக்கு மனைவி மீது அன்பில்லையா? இல்லை இருக்க வேண்டிய அவசியம் இல்லையா? //

தாலியே கட்டாவிட்டால் மட்டும் நிறை
அன்புடன் வாழ்வார்கள் என உறுதியாக சொல்ல முடியுமா?

//திருமணம் என்பது ஒரு பந்தம். அன்பும், புரிதலும் தான் திருமண பந்தத்துக்கு தேவையான அடையாளங்கள். இவை இரண்டும் இருவருக்கும் தேவை. அதைவிடுத்து தாலியை பெண்ணுக்கு மட்டும் அணிவித்து விட்டு, அந்த முறையை உங்களை வைத்தே வளர்த்து வரும் ஆணாதிக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
‘சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்’. முகம் சிவக்க வெட்கப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலியும் அதுபோலத்தான். //

நல்லாத்தான் கிழப்புறீங்க
இதெல்லாம் உங்ககளை பார்த்து நம்ம வடிவேலு பாணியில் கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்களால் இதை செயலாக்க முடியுமா?

உங்களுக்கு திருமணம் ஆகியிருக்காது என்று நம்புகிறேன்,நீங்கள் தாலி கட்டாமல் ஒருத்தியை கூட்டி வைத்து குடும்பம் நடத்துவீர்களா?\

தாலி என்பது அடையாளமே தவிர அடிமை கயிறு கிடையாது.

உங்களுக்கு ஒரு சிலரை மட்டும் எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் .சொந்தமாக சிந்திக்க தெரியுமா?

யாரோ மூளை சலவை செய்ததின் பேரில் வந்து விட்டீர்கள் ..நாலு பேர் கமென்ட் எழுதனும்னா என்ன வேணா எழுதலாம் என்று...

ச.ஜெ.ரவி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வரதராஜலு, எதிர்கட்சி.
...................
///////////////////////
ஆண்கள் திருமணமானவர்கள் என்பதை அறிவிக்கும் வண்ணம் பண்டைய தமிழ் ஆண்கள் திருமணமான பின் மெட்டி அணிந்து கொண்டிருந்தனர். காலப்போக்கில் அது மாறி விட்டது.
///////////////////////
அப்படி என்றால் பெண்கள் மட்டும் ஏன் தொடர்ந்து தாலி அணிய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.

///////////////////////
மந்திரம் சொல்லாமல் தமிழ்ப்பெரியவர்கள் எடுத்துக்கொடுக்கும் தாலியை கட்டி திருமணம் செய்கிறார்களே அதைப்பற்றி என்ன சொல்லுகிறீர்கள்.
///////////////////////

தாலி தேவை என்பதையே மந்திரம் சக்தி மிக்கது. கழற்றினால் கணவருக்கு சிரமம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தானே. இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து உண்டா என்ன?
///////////////////////
தாலியே கட்டாவிட்டால் மட்டும் நிறை
அன்புடன் வாழ்வார்கள் என உறுதியாக சொல்ல முடியுமா?
///////////////////////
தாலி கட்டினாலும், கட்டாவிட்டாலும், அன்பும், புரிதலும் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கும். அப்படியிருக்க தாலி எதற்கு என்பதே எனது வாதம்.
///////////////////////
உங்களுக்கு திருமணம் ஆகியிருக்காது என்று நம்புகிறேன்,நீங்கள் தாலி கட்டாமல் ஒருத்தியை கூட்டி வைத்து குடும்பம் நடத்துவீர்களா?\
///////////////////////
இதற்கு பதில் சொற்களாக அல்லாமல், செயலாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

///////////////////////
உங்களுக்கு ஒரு சிலரை மட்டும் எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் .சொந்தமாக சிந்திக்க தெரியுமா?
///////////////////////
நான் யாரையும் எதிர்க்கவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்ததின் பிரதிபலிப்பு அவ்வளவு தான்.
///////////////////////
யாரோ மூளை சலவை செய்ததின் பேரில் வந்து விட்டீர்கள் ..நாலு பேர் கமென்ட் எழுதனும்னா என்ன வேணா எழுதலாம் என்று...
///////////////////////
அந்த நிகழ்ச்சியை பார்த்து நான் மூளை சலவை செய்யப்பட்டிருந்தால், நான் தாலி அவசியம் என்றல்லவா பதிவிட்டிருப்பேன். நிகழ்ச்சியை பார்த்தீர்களா? இல்லையா?

எதிர்கட்சி..! said...

இல்லை .. நான் தெரியாமல் கேட்கிறேன் .. தாலி என்பது பற்றி இவ்வளவு சாடும் நீங்கள் அதனால் அடிமைத்தனம் உருவாகிறது
என்று கூறுகிறீர்கள்
///////////////////////

தாலி தேவை என்பதையே மந்திரம் சக்தி மிக்கது. கழற்றினால் கணவருக்கு சிரமம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தானே. இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து உண்டா என்ன?

//////////
தாலி என்பது அடையாளமே ! அது ஒரு மந்திரம் அல்ல.


தி.வி நிகழ்ச்சிகள் வர்த்தக நோக்கிலானவை.
நீங்களும் நானும் தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.

நீங்கள் எப்படி தாலி தேவையில்ல என்பது பற்றி ஒரு ஸ்டதிரமான் கருத்து கொண்டிருக்கிறீர்களோ அது போல அவர்களுக்கு தேவை.உங்களைபோண்டறவர்கள் அதை பெரிய இம்சையாக சித்தரிக்கிறீர்கள் அவ்வளவே

தாலி கட்டாவிட்டால் மட்டும் எல்லாம் சரியாக நடக்கும் என்று உங்களால் உறுதியளிக்க முடியாது.தாலி கட்டாமல் அடிமைப்படுத்தும் கொள்கைகள் கொண்டவர்கள் நிறைய உண்டு .

நல்ல சமுதாயத்துக்கு இன்னும் எவ்வளவோ தேவைப்படுகின்றன.

தாலி தான் அடிமைப்படுத்துகிர்தேன்பது குதர்க்க வாதம்.

ச.ஜெ.ரவி said...

மீண்டும் வருகைக்கு நன்றி எதிர்கட்சி

எனது பதிவில் தாலியை யாரும் போட்டுக்கொள்ள வேண்டாம். அவற்றை எல்லோரும் பிடுங்கி எரிந்து விடுங்கள் என நான் எழுதவில்லையே?. தாலி அணிந்து கொள்ள வேண்டாம் என நான் வலியுறுத்தவில்லையே. தாலி அணியாதவர்கள் குடும்ப பெண்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். அது அவர்களின் உரிமை அவ்வளவு தான். தாலி அணியாமல் இருப்பதா என சீறி எழும் கலாச்சார காவலர்களுக்கு தான் இந்த கேள்விகள். உங்களை எங்கு சேர்ப்பது என தெரியவில்லை.
மற்றபடி நான் எனது கருத்தை தான் தெரிவித்தேன். என் மனதில் பட்டதை தான் நான் சொன்னேன்.

Anonymous said...

//ஏன் பெண்கள் மட்டும் கஷ்டப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்? இது பெண்ணடிமைத்தனம் இல்லையா? ஏன் ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது?
இந்தக் கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.//

குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் தாலிக்கும் என்ன சம்பந்தம்?

குழந்தை பெற்றுக் கொள்ளுவதற்குத்தான் தாலி கட்டுகிறார்களா?

தாலியைப் பற்றி கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பாலியில் வித்தியாசங்களை பேசுகிறார்கள்