
‘‘நான் செய்தது தவறில்லை.எனது செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். இது ஒரு எரியும் பிரச்னை. எங்கள் சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை’’. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது செருப்பை வீசி எரிந்துவிட்டு சென்ற சீக்கிய பத்திரிக்கையாளரின் குரல் இது.
இந்திரா படுகொலையை அடுத்து நடந்த சீக்கியர் படுகொலைக்கு காரணமானவராக குற்றம்சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லரை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து சி.பி.ஐ. நீக்கியது தொடர்பான கேள்விக்கு சரியாக பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த இவர் செய்தியாளர் சந்திப்பில், அவர் மீது செருப்பை வீசி தாக்கியுள்ளார்.
‘‘எனது அணுகுமுறை தவறாக இருந்திருக்கலாம். இதை எந்த பத்திரிக்கையாளரும் செய்யக்கூடாது. ஆனால், நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்’’ என தன் தரப்பு நியாயத்தை சொல்லி இன உணர்வை எடுத்து வைத்துள்ளார் அந்த செய்தியாளர்.
எனவே அவர் செருப்பை வீசியது சரியா? இந்த அணுகுமுறையை வரவேற்பதா என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு இந்த பதிவை படிப்பது நல்லது. அந்த கேள்விகள் பிரதானம் என்பவர்கள் தொடர்ந்து பதிவை படிக்க வேண்டாம்.
சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்பான சி.பி.ஐ. மீதான கோபத்தை அரசின் மீதும், அரசின் சார்பில் செயல்படும் உள்துறை அமைச்சர் மீதும் காட்டியுள்ளார் அந்த செய்தியாளர். சரியா, தவறா என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால், அது ஒரு இன உணர்வு.
ஆனால், இதைப்பற்றி எல்லாம் நாம் படிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. ஏனெனில் நமக்கு ஏது இன உணர்வு. நித்தம் நித்தம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், நமக்கு இன உணர்வு எட்டி கூட பார்க்காது.
தமிழர்களை கொல்ல ஆயுதங்களை வழங்கி விட்டு, அமைதிக்கு தூது போகிறோம் என்றும், ‘போர் நடக்கும் இடங்களில் அப்பாவி தமிழ் மக்கள் இறப்பது சாதாரணம்’ என்றும் நம்மை அடிமையாய் ஆளும் வர்க்கத்தினர் சொல்வதை அமைதியுடன் கேட்டு மீண்டும் அரியாசனையில் அமர வைப்பது தானே நம் பணி.
இப்போதைக்கு எம்.பி. சீட், ஜெயித்தால் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் கேபினட் அமைச்சர் பதவி. தமிழர் செத்தால் எனக்கென்ன என கணக்கு போட்டு வரும் கருணாநிதிக்கும், இலங்கை தமிழர்கள் உயிரை ..யிராக கூட மதிக்காத காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் இன்னும் நம்புகிறோமே நமக்கு ஏது இன உணர்வு.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பிய சிறுத்தை கட்சித் தலைவர் இப்போது ஆயுதம் வழங்கி கொல்லும் ‘கை’யுடன் கைகோர்த்துள்ளார். இலங்கை தமிழர்கள் எங்கள் சொந்தங்கள் என நீட்டி முழக்கி புரட்சி வார்த்தைகளில் புயல் போல் பேசியவர் இலங்கை தமிழர்கள் துச்சமென மதிக்கும் அன்னையுடன் கரம் கோர்த்து, தமிழர் படுகொலையா அப்படியென்றால்? என கேட்கத்துவங்கி விட்டார். இவர்கள் இருவரையும் விட அம்மாவுடன் நேரிடையாகவும், காங்கிரசுடன் மறைமுகமாகவும் கரம்கோர்த்துள்ளார் மருத்துவர்.
ஆனால் இதையெல்லாம் கண்ட பின்னும், கொலையாளிகளில் குறைந்த கொலை செய்தவர்களை தேடுவதை போல இவர்களில் ஒருவரையே தேடி வருகிறோமே நமக்கு ஏது இன உணர்வு. அங்கு தினமும் செத்து செத்து பிணமாகி வருபவர்கள் நம் இனத்தினர். தமிழர்கள். அதை எப்படி நாம் மறக்கிறோம். கொலை செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு போராடும் நிலையில், கொலையை தடுத்து நிறுத்த போராட தயங்குகிறோமே நமக்கு ஏது இன உணர்வு.
அரசுடன் எவ்வித தொடர்பும் இல்லாத சி.பி.ஐ. மீதான சீக்கியர்களின் கோபம், அரசின் மீதும், அரசு சார்பில் உள்துறை அமைச்சர் மீது செருப்பாய் எரியப்பட்டுள்ளது. இதே தமிழன் இன உணர்வு கொண்டால் . . . ஆனால், இந்த கேள்விகளுக்கு யோசிக்க வேண்டிய அவசியம் கூட நமக்கு ஏற்படாது. இன உணர்வு என ஒன்று நம்மிடம் இருக்கிறதா என்ன?
சீக்கிய பத்திரிக்கையாளரால் உள்துறை அமைச்சருக்கு விழுந்த செருப்படி, உண்மையில் தமிழனுக்கு விழுந்த செருப்படி. நான் ப.சிதம்பரத்தை கூறவில்லை. அவரை அப்படி கூற எனக்கென்ன பைத்தியமா பிடித்துள்ளது.
18 comments:
Change the title please. It is not correct in any way.
தமிழனுக்கு செருப்படியா??
தமிழன் என்ற உணர்வே இல்லாதவன் எப்படி தமிழனாவான்?
தமிழன் என்ற உணர்வு சிறிதாவது இருந்தால் ஈழப்பிரச்சினையில் எவ்வளவோ சாதித்திருக்கலாம்.
செருப்படி போதாது. காங்கிரஸில்/காங்கிரஸோடு வால்பிடிக்கும் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இனி இதுபோல் ஒரு சூழலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
சீக்கியர் ஒருவர் தனது இனத்திற்காக செய்துவிட்டார். பார்ப்போம் தமிழர் ஒருவர் செருப்பு வித்தையை என்று தொடங்குகிறார் என்று.
அடுத்த அடி மஞ்சள் துண்டு நரிக்கு விழுந்தால் சந்தோஷம்.
நண்பர்களே! இப்படிபட்ட நாட்டின் அங்கமாக இருப்பதரற்கு நாம்மை நாமே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்.
இப்போதைக்கு எம்.பி. சீட், ஜெயித்தால் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் கேபினட் அமைச்சர் பதவி. தமிழர் செத்தால் எனக்கென்ன என கணக்கு போட்டு வரும் கருணாநிதிக்கும், இலங்கை தமிழர்கள் உயிரை ..யிராக கூட மதிக்காத காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் இன்னும் நம்புகிறோமே நமக்கு ஏது இன உணர்வு.
இது சரி! சீக்கியனுக்குள்ள உணர்வு நமக்கில்லையே!
வருகைக்கு நன்றி செயபால், வோல்டா, கேப்டன் ஜெகன்.
நான் தமிழன் என்று சொல்வது
ப.சிதம்பரத்தை அல்ல.
இன உணர்வு வெளிப்படுத்தாத
நம்மை தான் சொன்னேன்.
சீக்கியர்களின் இந்த இன உணர்வின் வெளிப்பாடு
இன உணர்வை வெளிப்படுத்தாத நமக்கு
செருப்படி கொடுப்பதுபோல்
இருந்ததை உணர்த்தத்தான் இந்த தலைப்பு.
வேண்டும் என்றால்
தமிழர்களுக்கு செருப்படி
என மாற்றிக்கொள்ளலாம்.
நண்பர்களே! இப்படிபட்ட நாட்டின் அங்கமாக இருப்பதரற்கு நாம்மை நாமே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்.
///
உங்கள் கருத்துடன் முற்றிலும் ஒத்துப்போகிறேன் நண்பரே ஒரு சிறு திருத்தத்துடன்
இப்படிப்பட்ட நாட்டின் என்பதை விட இப்படிப்பட்ட இனத்தின் என்று மாற்றிக்கொள்ள வேண்டும்.
வெட்கம், மானம் இல்லாமல், எவன் கொடுத்தாலும் கைநீட்டி வாங்கிக் கொண்டு, அதிகம் கொடுத்தவனுக்கு ஓட்டுப் போடும் தன்மானத் தமிழர்கள் நிறைந்த பொன்னுலகாம் தமிழகத்தை இப்படிச் சொல்லலாமா?...
.......
அது செருப்புக்கு அவமானமில்லையா?
மதிபாலா. வி.எஸ்.கே. அவர்களே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தலைப்பு மாற்றப்பட்டு விட்டது
திரு.செயபால் அவர்களே
ஏன்ன தேசமோ இங்கு பொய்கள் கூடியெ நியாயம் பேசுமோ????? -என்ற வைரமுத்துவின் கவிதை நினைவிற்கு வருகிறது.
இப்படியெ போனால் விரைவில் தனி தமிழ்நாடு நிச்சயம்.நான் இறக்கும் முன் அதை காணவேண்டும்.
/*நண்பர்களே! இப்படிபட்ட நாட்டின் அங்கமாக இருப்பதரற்கு நாம்மை நாமே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்.*/
அருமை
இனி உன் தாய்நாடு எது என்றாள் "தமிழ்நாடு" என்று சொல்லுங்கள்.
ஆரிய மாயை என சாடிய அண்ணா வழி வந்த இவர்கள்,இன்று அவர்களுக்கு அடி வருடி திரிகிறார்கள்.இவர்களால் என்றுமே தமிழ் நாட்டிற்கு விடிவு இல்லை.இவர்களால் ஈழ தமிழனுக்கு எப்படி உதவ முடியும்?ஒரு 5000 கோடி கொடுப்பதாக பெரம் பேசி பாருங்கள்.
well said
தலைப்பை மாற்றியதற்கு நன்றி. ஆனால் இது இன்னமும் மாற வேண்டும். உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனாலும்,
தமிழுக்கோ தமிழினத்திற்கோ இந்த செருப்படியால் ஒன்றுமில்லை. சிதம்பரம் தமிழன் என்பதைத் தவிர.
சிதம்பரத்திற்கு அல்லது காங்கிரசுக்கு விழுந்த செருப்படி என்று மாற்றினால் நல்லாக இருக்கும்.
இன்னமும் இந்திய மயக்கத்திலிருக்கும் தமிழர்கள் இனியாவது அதிலிருந்து விடுபட வேண்டும். இது ஈழப் போராட்டம் நமக்களித்த கொடையாக இருக்கட்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது... இந்தியாவும் இப்படித்தான்... பிடுங்க வேண்டும்… நாம் பிடுங்குவோம்.
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Corporate English classes in Chennai
Communicative English training center
English training for corporates
Spoken English training
Workplace Business English training institute
Workplace English training for corporates
Workplace soft skills training institutes
Corporate language classes
Business English training for Workplace
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ACCA coaching | ACCA Exam Coaching Classes | ACCA Training in Chennai | ACCA Training institutes Chennai | ACCA courses Chennai | ACCA Training institutes Chennai | ACCA Qualifications and Courses | Diploma in International Financial Reporting | Best ACCA training institutes | CBE Centres in Chennai | DIPIFR exam coaching center | ACCA Approved Learning Partners | Diploma in IFRS Chennai | ACCA Diploma in IFRS | ACCA Approved Learning Providers | ACCA Approved Learning Partner Programme | ACCA Coaching India
Post a Comment