திருப்பூரில் கடந்த 10 நாட்களாக நடந்த புத்தகத் திருவிழா, நாளையுடன் முடிவடைகிறது. கடந்த காலங்களில் பலமுறை இது போன்ற கண்காட்சிகள் நடந்திருந்தாலும் கூட, அதில் இருந்து எல்லாம், வேறுபட்டு காட்சியளிக்கிறது இந்த புத்தக கண்காட்சி. வழக்கமாக கண்காட்சி ஏற்பாடுகள் குறித்தும், விற்பனை குறித்தும் பதிப்பாளர்களும், விற்பனையாளர்களும் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், இந்த முறை அந்த அதிருப்தி காணப்படவில்லை. மாறாக பதிப்பாளர்களும், விற்பனையாளர்களும் கண்காட்சி ஏற்பாடு, விற்பனை குறித்து மகிழ்ச்சியை தெரிவித்ததை காண முடிந்தது.
நடப்பாண்டில் புத்தக கண்காட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என தேடி அலையவேண்டியதில்லை. அதற்கான அவசியமின்றி, எங்கும் சிதறி கிடக்கின்றன காரணங்கள். வரவேற்புக்குழுவில் துவங்கி ஒவ்வொரு குழுவும் தன் பணியை சிறப்பாக செய்தது; வழக்கமாக இந்த கண்காட்சியை கண்டுகொள்ளாத ஊடகங்கள் இந்த முறை கண்காட்சி குறித்த செய்திக்கு முக்கியத்தும் அளித்தது; இவற்றுக்கெல்லாம் மேலாக மக்களின் ஆதரவு என காரணங்களை நீண்ட பட்டியிடலாம்.
இதில் முக்கியமானது சேர்தளம் நண்பர்களின் பணி. கண்காட்சிக்கு பார்வையாளர்களாக பொதுமக்களையும், புத்தக ஆர்வலர்களையும் ஈர்க்க இவர்கள் மேற்கொண்ட முயற்சி மிகச் சிறப்பானது. ‘ஒரு டேபிள், 2 சேர்கள் போதும், மடிக்கணினியுடன் வந்து இணையத்தில் கண்காட்சியை பரப்ப வேண்டியது எங்கள் பணி’ என உறுதி கூறிய இவர்கள், கடந்த 10 நாட்களாக அதை திறம்பட செய்தும் முடித்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்த கண்காட்சி நாளை முடிந்து விடும். அடுத்த சில தினங்களில் நாம் கூட இதை மறந்து விடக்கூடும். ஆனால் கண்காட்சி நிகழ்வுகள், காணொளிகளாக, புகைப்படங்களாக, கட்டுரைகளாக இணையத்தில் தொடர்ந்து நிலைக்கும். எந்த எதிர்பார்ப்புமின்றி மிகுந்த ஈடுபாட்டோடு, ஒவ்வொரு நாள் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளையும் இணையத்தில் இணைத்து, புத்தக ஆர்வலர்களை கண்காட்சியில் இணைத்த சேர்தளம் இணையக்குழுவின் பணிக்கு பாராட்டுகளை தெரிவிப்பது அவசியம் என உணர்கிறேன். என் சார்பிலும், இணைய நண்பர்கள் சார்பிலும்...
12 comments:
மிக்க நன்றி!
உங்களது இந்தப் பதிவு எங்களின் அனைத்துப் பணிகளுக்கும் உற்சாகமூட்டுவதாக அமையும்.
ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி!!
தேங்க்யூ சோ மச் ரவி. ரொம்ப சந்தோஷமா இருக்கு கேட்க. புத்தகக் கண்காட்சி வரவேற்பு குழுவிற்கும் எங்களது நன்றிகள். நிறைய பொறுப்பைக்கொடுத்து எங்களை வழிநடத்தியதிலும் சரி, சுதந்திரமாக செயல்பட விட்டதிலும் அவர்களுக்கு சேர்தளத்தின் சார்பில் பெரிய நன்றீயை உரித்தாக்குகிறேன்.
உங்கள் ஊக்கம்... எங்கள் ஆக்கம்!
நன்றி.
நன்றி சார் அடுத்த ஆண்டு இன்னுமின்னும் நிறைய செய்வதற்க்கு ஆவலாக இருக்கோம்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
மிக்க நன்றிங்க ரவி!
இந்த வருசம்தான் புத்தக கண்காட்சியில் சேர்தளம் தீவிரமாக இயங்கியதை பெருமைப்படுத்தியமைக்கு நன்றிகள் பல ..
கண்காட்சி நிகழ்வுகள், காணொளிகளாக, புகைப்படங்களாக, கட்டுரைகளாக இணையத்தில் தொடர்ந்து நிலைக்கும். எந்த எதிர்பார்ப்புமின்றி மிகுந்த ஈடுபாட்டோடு, ஒவ்வொரு நாள் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளையும் இணையத்தில் இணைத்து, புத்தக ஆர்வலர்களை கண்காட்சியில் இணைத்த சேர்தளம் இணையக்குழுவின் பணிக்கு பாராட்டுகளை தெரிவிப்பது அவசியம் என உணர்கிறேன்
https://www.youtube.com/edit?o=U&video_id=rXR-uWG9xIc
அருமை
https://www.youtube.com/edit?o=U&video_id=UOY6sd0aEkg
அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=44JiJPaFwEM
SUPER POST
https://www.youtube.com/edit?o=U&video_id=CBZJihRgLJk
Post a Comment