எதிலும் நேர்மறையான சிந்தனை வேண்டுமாம். அம்மாவில் துவங்கி ஆசிரியர், உயர் அதிகாரி வரை பலராலும் எனக்கு அருளப்பட்ட வாசகம் இது. இந்த வாக்கினை நினைவில் கொண்டு இணையத்தில் பார்வை செலுத்திய போது கண்ணில் பட்ட படங்களும், அதற்கான நேர்மறையான சிந்தனைகளும்.இவை பேசும் படங்கள்... வீட்டில் ஜன்னல் இல்லை என்ற வெகுநாள் ஏக்கத்தை நிறைவேற்றிவிட்டது இலங்கை
ராணுவம். இதோ எங்கள் வீட்டின் நவீன வகை ஓவியத்துடனான ஜன்னல்......
‘‘மேஜையில்லாத பள்ளியில் எத்தனை நாள் படிப்பது. நல்லவேளை ராணுவ தாக்குதலில்
பள்ளியை இழந்தபோதும், ராணுவ குண்டு அடைக்கும் களன்கள் எங்களுக்கு மேஜையாகி கிடைத்து
விட்டன’’
‘‘ராணுவ தாக்குதல் மட்டும் நடக்காமல் இருந்தால், நான் எப்படி
துப்பாக்கி ஏந்த கற்றுக்கொள்வது. துப்பாக்கி பயிற்சிக்கு வித்திட்ட இலங்கை
ராணுவத்துக்கு நன்றி’’
‘‘சூரிய ஒளியில் சமையல் திட்டம் போல், மழையிலும் சமைக்கும் திட்டம்.
கற்றுத்தந்தது இலங்கை ராணுவத்தின் அட்டூழியம்’’
‘‘வீட்டையும், குளியலறையும் இழந்தபோதும், ராணுவ தளவாட பெட்டி கிடந்ததால்,
தம்பி குளிக்க நேர்ந்தது. அவர்கள் மட்டும் இந்த பெட்டியை இங்கு விட்டு
சென்றிருக்காவிட்டால்...’’
‘‘படிக்க மட்டுமே தெரிந்திருக்க எங்களுக்கு, அம்மாவையும், அப்பாவையும் கொன்று
குவித்து மீன் பிடி தொழிலை கற்றுத்தந்திருக்கிறது இலங்கை ராணுவம். ராஜபக்ஷேவுக்கு
நன்றி கூறுங்கள் ராணுவத்தினரே’’
1 comment:
ரணமாயிருக்குது மனசு.
Post a Comment